பள்ளியிலேயே குழந்தையை பெற்றெடுத்த 16 வயது மாணவி!

16 வயது பள்ளி மாணவி ஒருவர் குழந்தையை பெற்றெடுத்து, அதை தனது சக மாணவியின் பையில் மறைத்து வைத்திருந்த சம்பவம் ஒன்று இங்கு இடம்பெற்றுள்ளது.

பள்ளியிலேயே பெண் குழந்தை ஒன்றை அந்த மாணவி பெற்றெடுத்துள்ளார். ஆனால் அக்குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டது. இதையடுத்து செய்வதறியாமல் தவித்த அந்த மாணவி, சிசுவின் உடலை தனது சக மாணவி ஒருவரின் பையில் வைத்து அதை அவரிடமே கொடுத்து விட்டார். இதில் புத்தகம் தான் இருக்கிறது என்று நினைத்த அந்த மாணவி, அதை 17 மணி நேரம் வைத்துள்ளார்.

இதற்கிடையே குழந்தை பிரசவித்த மாணவிக்கு வயிற்று வலி ஏற்படவே அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்களிடம் நடந்ததையெல்லாம் தெரிவித்துவிட்டார்.

இது குறித்து  காவல்துறையினர் கூறுகையில், புத்தகப் பையில் பச்சிளம் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தன் தோழி கொடுத்த பையில் இருந்தது குழந்தையின் சடலம் என்பது தெரிய வந்ததும் அந்த மாணவி பீதியடைந்தார்.

குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அது பிறந்தவுடன் தலையில் காயம் மற்றும் நுரையீரல் பாதிப்பால் இறந்தது என்பது தெரிய வந்துள்ளது என்றார்.

சிறுமிகள் இதுபோன்று கர்ப்பமாகி குழந்தையைப் பெற்று அதை எங்காவது போடுவது இங்கு தொடர் கதையாகி விட்டது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 31 குழந்தைகள் கைவிடப்பட்டுள்ளன.

அதில் 10 குழந்தைகள் உயிருடன் உள்ளன. 19 குழந்தைகள் இறந்து விட்டன. மேலும் 2 குழந்தைகளின் நிலை குறித்து மருத்துவமனைகள் இன்னும் தெரிவிக்கவில்லை என்று அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.