ஜோகூரில் உள்ள இந்திய சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்னைகளை விவாதிக்க முன் வருமாறு துணைப் பிரதமரும் முன்னாள் ஜோகூர் மந்திரி புசாருமான முஹைடின் யாசினுக்கு ஜோகூர் எதிர்த்தரப்புத் தலைவர் பூ செங் ஹாப் சவால் விடுத்துள்ளார்.
அதே விவகாரம் மீது அம்னோவுடன் விவாதம் நடத்த விரும்புவதாக பிகேஆர் ஏற்கனவே அம்னோவுக்கு விடுத்திருந்த சவாலை பூ வரவேற்றார்.
“மலாய்க்காரர்களை அம்னோ பிரதிநிதிக்கிறது. மஇகா இந்தியர்களையும் மசீச சீனர்களையும் பிரதிநிதிக்கின்றன என்ற ‘இன உணர்வு’ கோட்பாடுகள் இருக்கக் கூடாது என உறுதியாக நம்புகிறேன்,” என பூ சொன்னார்.
“அரசியல் கட்சிகள் இன ரீதியாக இன்னும் செயல்பட்டால் உண்மையான தேசிய ஐக்கியம் ஏற்படாது.”
ஜோகூர் பாருவில் வெள்ளிக்கிழமை இரவு டிஏபி, 13வது பொதுத் தேர்தலுக்கான தேசிய கருபொருள் பாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிகழ்வில் பூ பேசினார்.