போலீஸ் குற்றங்களில்தான் கவனம் செலுத்த வேண்டும்

உங்கள் கருத்து: “சிஐடி-இன் (குற்றப் புலன் விசாரணைத் துறை) ஆள்பலம்  இத்தனை குறைவாக இருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை”

போலீசார் குற்ற-எதிர்ப்பில் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதில்லை

குழப்பமற்றவன்: சிஐடி-இன்(குற்றப் புலன் விசாரணைத் துறை)ஆள்பலம்  இத்தனை குறைவாக இருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை.அதனால்தான் குற்றம் நிகழ்ந்த இடத்துக்கு போலீசார் வந்துசேர அவ்வளவு நேரமாகிறது(சில நேரங்களில் வருவதே இல்லை).

போலீஸ் படையை முழுமையாக திருத்தி அமைத்து குற்றப்புலன் விசாரணைக்கு கூடுதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் பாதுகாப்புக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

பிரெட்டோ: வேலைக்குத் தகுதியற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் ஒரு துறை போலீஸ் படை,  என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.போலீசில்  72விழுக்காட்டினர் உருப்படியான வேலை செய்வதில்லை.

கேஎஸ்என்: பல முனைகளிலிருந்தும் போலீஸ் பற்றிக் குறை சொல்லப்படுகிறது.இந்தக் குறைகூறல்களை ஆக்கப்பூர்வமாக உள்வாங்கி அரச மலேசிய போலீஸ் படை அதன் பலவீனங்களைக் களைய வேண்டும்.தேவையென்றால் படை மொத்தத்தையும் திருத்தி அமைக்கலாம்.

அவர்கள் குற்றத்தை எதிர்ப்பதற்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.அப்போதுதான் பொதுமக்கள், எந்த நேரத்திலும் எங்கு இருந்தாலும், தங்களுக்குப் பாதுகாப்பு உண்டு என்ற உணர்வுடன் இருப்பார்கள்.

கொள்ளையர்களையும் குண்டர்களையும் நடுநடுங்க வைக்க வேண்டும்.அவர்களை அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும்.குற்றவாளிகளுக்குத் தாங்கள் எந்த நேரத்திலும் போலீசால் பிடிபடலாம் என்ற அச்ச உணர்வு இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு சூழலை பிடிஆர்எம் உருவாக்க வேண்டும்.அப்படிப்பட்ட அணுகுமுறையைத்தான் பின்பற்ற வேண்டும்.அதுவும் அவசரமாக.

யாப்: பக்காத்தான் ரக்யாட்டுக்குத் தொல்லை கொடுப்பதற்காகவே பிஎன் போலீஸ் படையின் 72விழுக்காட்டைப் பயன்படுத்திக்கொள்கிறது என்றால் அது பக்காத்தானுக்குக் கொடுக்கப்படும் மறைமுகமான அங்கீகாரமாகும்.

ஆனோன் _3b56: ரோந்து கார்களில் காவல்பணியில் ஈடுபடும் போலீசார் கொள்ளை, கொலை,குண்டர்கும்பல் சண்டை,ஆள்கடத்தல், சட்டவிரோத சூதாட்டம் போன்றவற்றில் கவனம் செலுத்துவார்கள் என்று பார்த்தால் அவர்கள் சிறுசிறு போக்குவரத்துக் குற்றம் செய்வோரைப் பிடிப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள்.

காவல் செய்வதற்குப் போதுமான போலீசார் இல்லை என்பது அடிக்கடி சொல்லப்படும் ஒரு காரணம். நிலைமை இப்படியே போனால், குடிமக்களை இறைவன்தான் காக்க வேண்டும்.

விழிப்பானவன்: இங்கு, முன்னுரிமை என்பதுதான் முக்கியமான விவகாரம். போலீஸ் படையில் மட்டுமல்ல மற்ற அரசுத் துறைகளிலும் ஆரவாரம்தான் அதிகமாக உள்ளது.வேலை நடப்பது குறைவுதான்.

போலீசில் தகுதியின்மையும் திறமையின்மையும் நிலவுகிறது என்றால் அதற்குக் காரணம் அதன் எல்லா மட்டங்களிலும் போட்டியிடும் தன்மை குறைந்திருக்கிறது, ஊழல் மிகுந்திருக்கிறது.

போலீஸ் படையினருக்குச் சரியான முறையில் பயிற்சி கொடுக்கப்படுகிறதா என்பதும் சந்தேகமாக இருக்கிறது.காவல் பணி என்றால் என்னவென்பது அவர்களுக்குச் சரியாக உணர்த்தப்படவில்லை என்றே நினைக்கிறேன்.அதனால்தான் அவர்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள், துப்பாக்கியை எடுத்துச் சுடுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

ஊழல் அதுதான் போலீஸ் படையின் சீர்கேட்டுக்கு மிகப் பெரிய காரணம் என்று நினைக்கிறேன்.ஒரு இன்ஸ்பெக்டர் ஊழல்பேர்வழியாக இருந்தால், அவருக்குக்கீழ்ப் பணிபுரியும் சார்ஜெண்டுகள், கார்ப்பரல்களை அதிகாரம் செய்யும் தகுதியை இழந்து விடுகிறார்.கறைபடிந்த கைகளை வைத்துக்கொண்டு கீழ்நிலை அதிகாரிகளை எப்படி கண்டிக்க முடியும்?

அதன் விளைவாக, ஒவ்வொருவரும் மற்றவர்களை அனுசரித்து போகிறார்கள், அண்ணன் தம்பிகளாக புரிந்து நடந்து கொள்கிறார்கள்.

கிம்: போலீஸ் படை தன்னலச் சேவைக்கும் அரசியல் எஜமானர்களின் சேவைக்கும்தான் முன்னுரிமை கொடுக்கிறது.கடைசியாகத்தான் மக்கள் சேவை.இப்போதைய ஆட்சியில் இதுதான் தொடரும்.