சமுதாயத்தில் பேரும் புகழும் பெற்று விளங்கும் சில பெருமக்கள் – அவர்களில் சிலர் டான்ஸ்ரீகள் – போலிப் பல்கலைக்கழகப் பட்டங்களை, அண்மையில் சிலாங்கூர் போலீஸ் முறியடித்த ஒரு கும்பலிடம் விலைகொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.
“அவர்களில் பலர் சமுதாயத்தில் உயர்வாக மதிக்கப்படுபவர்கள்”, என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர் துன் ஹிசான் துன் ஹம்சா கூறினார்.
இன்று ஷா ஆலமில் மாநில போலீஸ் தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய துன் ஹிசான்,போலிப் பல்கலைக்கழகப் பட்டங்களை வாங்கியவர்களில் சிலர் ‘டான்ஸ்ரீகள்’ என்றார்.
அவை போலிப் பட்டங்கள் என்பது வாங்கியவர்களுக்கு “நன்றாகவே தெரியும்” என்று குறிப்பிட்ட அவர், அந்த ஆவணங்களை அவர்கள் வேலை தேடுவதற்காகவோ வேறு நோக்கங்களுகோ பயன்படுத்தி இருந்தால் அது மோசடிக் குற்றமாகும் என்றார்.