இந்துக் கோவில்களுக்கு நிலம் வழங்க பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு

இஸ்லாமாபாத்: இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தானில் உள்ள பல இந்து கோவில்கள் பராமரிக்கப்படாமல் சேதமடைந்துள்ளன.

ராவல்பிண்டியில் உள்ள சில கோவில்களில் மட்டும் வழிபாடு நடக்கிறது. இதற்கிடையே, ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரமேஷ்லால், அந்நாட்டு பிரதமர் அஷ்ரப்பை சந்தித்து இஸ்லாமாபாத்தில் இந்து கோவில்கள் கட்ட, நிலம் ஒதுக்கும்படி கோரியிருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்ற பாகிஸ்தான் பிரதமர் அஷ்ரப், கோவில் கட்ட உடனடியாக நிலம் ஒதுக்கி கொடுக்கும்படி இஸ்லாமாபாத் பெருநகர வளர்ச்சிக் கழக தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார்.