பாரிஸ்: பிரான்ஸ் அதிபர் பிரான்கோஸ் ஹோலண்ட், அரசு பணத்தை சிக்கனப்படுத்த விடுமுறைக்காக ரயிலில் பயணம் சென்றார்.
தற்போதைய அதிபர் பிராங்காய்ஸ் ஹோலன்ட், தேர்தல் பிரசாரத்தின் போது, “கடுமையான பொருளாதார நெருக்கடி காணப்படும், இந்த காலகட்டத்தில் நான் ரயிலில் பயணித்து விடுமுறைக்குச் செல்வேன்; விமானத்தில் பயணித்து அரசுப் பணத்தை வீணடிக்க மாட்டேன்” என, கூறியிருந்தார்.
பிரான்ஸ் அதிபராக இருந்த நிகோலஸ் சர்கோசி அரசு பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து பெரும் சர்ச்சைக்கு ஆளானார்.
ஆனால், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலின் போது, அரசு பணத்தை சிக்கனமாக செலவு செய்வேன் என்று பிரான்கோஸ் ஹோலண்ட் வாக்குறுதி அளித்தார். அதன்படி, மிஸ்டர் எளிமை என்று பெயர் எடுக்க முடிந்த வரை செலவுகளை குறைத்து வருகிறார்.
இந்நிலையில் விடுமுறைக்காக பாரிசில் இருந்து போர்ட் டி பிரகான்கன் நகருக்கு நேற்று ரயிலில் சென்றார் பிரான்கோஸ். அவருடன் காதலி வெலரி டிரியர்வீலரும் சென்றார். இருவரும் முதல் வகுப்பில் பயணம் செய்தனர்.