பினாங்கில் முஸ்லிம்கள் மதம் மாற்றம் செய்யப்படுவதற்கான ஆதாரத்தை என்ஜிஒ சமர்பிக்கும்

அந்நியர்கள் பினாங்கில் முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்வதாகக் கூறிக் கொள்ளும் என்ஜிஒ என்ற ஒர் அரசு சாரா அமைப்பு படங்கள் வடிவிலும் வீடியோ ஒளிப்பதிவுகள் வடிவிலும் ஆதாரங்களை பினாங்கு இஸ்லாமிய விவகார மன்றத்திடம் சமர்பிக்கவிருக்கிறது.

அந்த ஆதாரங்கள் வரும் வியாழக்கிழமை பினாங்கு இஸ்லாமிய விவகார மன்றத் தலைவர் முகமட் சாலேயிடம் கொடுக்கப்படும் என Pertubuhan Aktivis Pengupayan Insan (API) தலைவர் நுர் பித்ரி அமிர் முகமட் கூறினார்.

“நாங்கள் ஏற்கனவே முகமட் சாலே-உடன் தொடர்பு கொண்டுள்ளோம். வியாழக்கிழமை காலை நாங்கள் அவரைச் சந்திக்கப் போகிறோம்.”

“நாங்கள் அந்தப் படங்களையும் டிரைஷா ( trishaw ) ஒட்டுநரின் வீடியோ (ஒரு சாட்சி) பதிவுகளையும் நாங்கள் ஆதாரங்களாக ஒப்படைப்போம்,” என மலேசியாகினி இன்று தொடர்பு கொண்ட போது நூர் பித்ரி கூறினார்.