பக்காத்தான் ராக்யாட் வழங்கியுள்ள மாற்று மெர்தேக்கா தினக் கருபொருளை தான் பயன்படுத்தப்போவதில்லை என பினாங்கு அறிவித்துள்ளது. ஏனெனில் அது ஏற்கனவே ஜுலை மாதம் ஒரு கருபொருளை முடிவு செய்துள்ளது.
அந்த முடிவைத் தொடர்ந்து பக்காத்தான் ராக்யாட் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு மாநிலங்களும் வெவ்வேறான கருபொருளைப் பயன்படுத்தும் என்பதே உண்மையாகும்.
பினாங்கு மாநிலம் Budaya Bersih, Merdekakan Rakyat என்னும் கருப்பொருளைப் பயன்படுத்தும் என முதலமைச்சர் லிம் குவான் எங் இன்று நிருபர்களிடம் கூறினார்.
புத்ராஜெயா அறிவித்துள்ள Janji Ditepati என்ற கருபொருளுக்குப் பதிலாக பக்காத்தான் ராக்யாட்
ஆகஸ்ட் முதல் தேதி Sebangsa, Senegara, Sejiwa என்னும் கருப்பொருளை அரிமுகம் செய்தது.
கூட்டரசு அரசாங்கத்தின் கருப்பொருளான Janji Ditepati-யைப் பொதுத் தேர்தலை ஒட்டி தேர்தல் பிரச்சாரக் கருப்பொருளாக பிஎன் பயன்படுத்துவதால் அது கடுமையாக குறை கூறப்பட்டுள்ளது.
பக்காத்தான் உயர் தலைமைத்துவம் மாற்றுக் கருப்பொருள் மீது முடிவு செய்வதற்கு முன்னதாக பினாங்கு,கெடா, கிளந்தான் ஆகியவை தங்களது சொந்த மெர்தேக்கா தினக் கருப்பொருளை முடிவு செய்து விட்டன.
ஆகவே பக்காத்தான் கருப்பொருளை இப்போது சிலாங்கூர் மட்டுமே பின்பற்றும் எனத் தோன்றுகிறது.