ஈழத்தை இலங்கையில் உருவாக்கமுடியாது என்கிறார் சிங்கள இனவாதி

உலகத்தில் எந்த இடத்தில் ஈழம் தொடர்பாக மாநாடுகளை நடத்தினாலும் இலங்கையில் ஈழம் என்றொரு நாட்டை உருவாக்குவது என்பது வெறும் கனவில் மாத்திரமே முடியும் என இலங்கையின் ஜாதிக யஹல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்குள் இருந்து கொண்டு நாட்டுக்கு துரோகம் இழைக்கும் தேசத் துரோகிகளை நாட்டில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும். செல்வநாயகத்தின் 50க்கு 50 என்ற கோரிக்கை பிரபாகரனின் பயங்கரவாதம் வரை வளர்ச்சியடைந்தது. இதனால் இலங்கை மக்கள் மாத்திரமல்லாது வெளிநாட்டு மக்களும் பாதிப்புகளை அனுபவித்தனர் என சிங்கள இனவாதியான மேதானந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதம் காரணமாக இலங்கையில் ஆயிரக்கணக்கான உயிர்கள் அழிந்தன. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. தேசிய உரிமைகள் அழிந்தன. இந்த பின்னணியில், இலங்கையில் அதிர்ஷ்டமாக ராஜபக்சே தலைமையில், பாதுகாப்பு செயலாளர் உட்பட்டோர் கொடூர பயங் கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தனராம்.

எனினும் உயிரிழந்த பயங்கரவாத்திற்கு மீண்டும் உயிரூட்ட நினைக்கும் தேசத் துரோகிகளை நாட்டில் உள்ளனர். தென் இந்தியாவில் உள்ள இனவாதிகள் இந்திய மத்திய அரசா ங்கத்திற்கு தலைவலியாக தற்போது மாறியுள்ளதை காணமுடி கிறது என்கிறார் இந்த தேரர்.

இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனவாத கருத்துகளை பகிரங்கமாக தெரிவிப்பதில் பௌத்த துறவி வேசம் போட்டுக்கொண்டு முதல்நிலை பெறுபவர் இந்த மேதானந்த தேரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தமிழர்கள் தங்களுக்கான தீர்வினை பெற்றுக்கொள்ளும்முயற்சிக்கு  இவரை போன்ற சிங்கள இனவாதிகள் தடையாக இருக்கின்றனர்.

TAGS: