லண்டன்: இளவரசர் ஹாரி இளம்பெண்களுடன் நிர்வாணமாக இருந்த படங்கள் வெளியானதை அடுத்து ஆபாச படத்தில் நடிக்க அவருக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பளம் தர ஒருவர் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் ஓய்வு எடுத்த இங்கிலாந்து இளவரசர் ஹாரி தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இளம்பெண்களுடன் நிர்வாணமாக இருந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விவிட் என்டர்டெயின்மென்ட்டைச் சேர்ந்த ஸ்டீவ் ஹிர்ஸ்ச் என்பவர் ஹாரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தனது ஆபாச படத்தில் (adult film) நடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதற்காக அவர் ஹாரிக்கு $ 10 மில்லியன் சம்பளம் தரத் தயாராக உள்ளார் என்று கூறப்படுகிறது.
படத்திற்கு ‘தி டிரபிள் வித் ஹாரி’ என்று பெயரிடத் திட்டமிட்டுள்ளாராம்.
இந்நிலையில் ஸ்டீவ் அனுப்பிய கடிதத்தைப் பார்த்து ஆத்திரமடைந்த ராஜ குடும்பத்தினர் பொது மன்னிப்பு கேட்குமாறு ஸ்டீவுக்கு உத்தரவிட்டுள்ளார்களாம். இது தவிர ஹாரியின் நிர்வாணப் படங்களைப் பார்த்து கடுப்பான அவரது காதலி கிரெஸிடா ஹாரியுடனான காதலை முறித்துக் கொண்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.