பெல்டா தலைமை இயக்குநர் அகற்றப்பட்டு ரோம்-க்கு அனுப்பி வைக்கப்படுகிறார்

பெல்டா எனப்படும் கூட்டரசு நில மேம்பாட்டு வாரியத்தின் தலைமை இயக்குநர் பதவியிலிருந்து சுல்கிப்லி அப்துல் வஹாப் அகற்றப்பட்டுள்ளார்.

அவர் விவசாய, விவசாய அடிப்படைத் தொழிலியல் அமைச்சுக்கு மாற்றப்படுவார்.

அவ்வாறு பாஸ் கட்சியுடன் தொடர்புடைய அரசு சாரா அமைப்பான அனாக்கின் தலைவர் மஸ்லான் அலிமான் கூறிக் கொண்டுள்ளார்.

சுல்கிப்லி இத்தாலியத் தலைநகர் ரோம்-க்கு அனுப்பப்படுவார் என மஸ்லான் கட்சி ஏடான ஹராக்கா-விடம் சொன்னார்.

சுல்கிபிலிக்குப் பதிலாக செப்டம்பர் முதல் தேதி பைசோல் அகமட் என்பவர் பெல்டா தலைமை இயக்குநராக பொறுப்பேற்பார்.

அந்த பைசோல் KPF என்ற Koperasi Permodalan Felda கூட்டுறவுக் கழகத்தின் தலைவர் ஈசா சாமாட்-டுடன் அணுக்கமான தொடர்புகளைக் கொண்டவர் என்றும் மஸ்லான் கூறிக் கொண்டார்.

ஈசா பெல்டா கூட்டுறவுக் கழகத் தலைவராக நியமிக்கப்படுவதையும் FGVH என்ற Felda Global Ventures Holdings பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படுவதையும் எதிர்த்ததாக சொல்லப்படுகிறது.

அதன் விளைவாக அவர் 9 மாத கல்வி விடுமுறையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும் தகவல்களை வெளியிடுவதற்காக நாளை மஸ்லான் நிருபர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

 

TAGS: