இன்றிரவு நடைபெறவுள்ள Janji Demokrasi பேரணி விதிமுறைகளுக்கு எதிரானது என்று போலீஸ் அறிவித்துள்ளது.
ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் மரியா சின்னைத் தொடர்புகொண்டபோது அவர் இதை உறுதிப்படுத்தினார். டாங் வாங்கி வட்டார போலீஸ் தலைவர் சைனுடின் அஹ்மட் அனுப்பிய கடிதம் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகத்தான் வந்து கிடைத்ததாக அவர் சொன்னார்.