ஒரு தமிழ் வானொலி அறிவிப்பாளராய் பணி செய்வது எளிதன்று. அதற்கு தனித்திறமையும் கேட்பவர்களை தன் வசம் இழுக்கும் நல்ல குரல் வளமும் தமிழ் உச்சரிப்பில் கூடுதல் கவனமும் மிகவும் அவசியமாகிறது. இவை மூன்றும் தன்வசம் கொண்டுள்ள பொன். கோகிலம் மலேசிய வானொலி தமிழ் அறிவிப்பாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுகிறார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மின்னல் பண்பலையில் மிக முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கிய பெருமை இவருக்கிருக்கிறது.
இவருடைய பணிக்காலத்தில் “மின்னலின் தமிழோசை” என்ற நிகழ்வு அறிமுகப்படுத்தப்பட்டு மலேசிய தமிழர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது என்று கூட சொல்லலாம். இனிய எளிய தனித்தமிழ் சொற்களை இளையோரிடையே கொண்டு சேர்த்த பெருமை இந்த நிகழ்வுக்கு இருக்கிறது.
பொன்.கோகிலம் தனது முதுகலை பட்டப்படிப்பை இதழியல் நிர்வாகத் துறையில் மேற்கொள்ள தற்போது தமிழகம் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அறிவிப்புத் துறை சார்ந்த அனுபவங்களின் தொகுப்பாக அவரோடு நடத்தப்பட்ட நேர்க்காணலின் ஒளிப்பதிவை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்.
http://www.youtube.com/watch?v=8z8ZWBwARUs