பக்காத்தான்: மற்ற பிஎன் திட்டங்கள் பயனற்றதாகி விட்டன

புதிய கல்விப் பெருந்திட்டம் மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தோன்றும் வேளையில் பயனற்றதாகி விட்ட மற்ற பாரிசான் நேசனலின் (பிஎன்) மகத்தான திட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டு பக்காத்தான் ராக்யாட் எச்சரித்துள்ளது.

ஊழலை ஒடுக்க கடந்த காலத்தில் பிஎன் பல திட்டங்களை அறிமுகம் செய்தது. அத்துடன் அரசாங்க உருமாற்றத் திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

“அவர்கள் அதிக மதிப்புள்ள ஆலோசகருக்கு மில்லியன் கணக்கில் பணம் கொடுத்திருக்கலாம். ஆனால் இறுதியில் அதன் அமலாக்கம் மேலோட்டமாகவே இருந்து வந்துள்ளது,” பெர்மாத்தாங் எம்பி-யுமான அன்வார் சொன்னார்.

பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள் மன்றக் கூட்டத்துக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.

அப்போது உடனிருந்த டிஏபி தலைவர் லிம் கிட் சியாங்,  கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்கும் ஒவ்வொருவரும் புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்வதாகத் தெரிவித்தார்.

ஆனால் அவற்றின் விளைவுகள் ஒரே மாதிரியாகத் தான் உள்ளன- அதாவது கல்வித் துறையில் மலேசியாவின் தரம் சரிந்து வருகிறது என்றார் அவர்.

 

TAGS: