பினாங்கில் மிகவும் வெறுக்கப்படும் டிஏபி மாண்புமிகு யார் ?

வரும் தேர்தலில் தாம் போட்டியிடப் போகும் பினாங்குத் தொகுதியை சுயேச்சை எம்பி-யான தான் தீ பெங் முடிவு செய்து விட்டார். ஆனால் அதனை அவர் இப்போது வெளியிட மாட்டார்.

“மக்களும் அவரது கட்சியும் மிகவும் வெறுக்கும் மாண்புமிகு-வை (சட்டமன்ற உறுப்பினர்) கொண்ட டிஏபி இடமாகும்,” என அந்த நிபோங் தெபால் எம்பி இன்று பினாங்கில் கூறினார்.

அது கொம்தார் சட்ட மன்ற உறுப்பினர் இங் வெய் தெக்-ஆக இருக்கலாமா என வினவப்பட்ட போது அந்த முன்னாள் பினாங்கு பிகேஆர் தலைவர் உறுதி செய்ய மறுத்து விட்டார்.

தான் இவ்வாண்டு பிகேஆர்-லிருந்து விலகி கீத்தா கட்சியில் சேர்ந்தார். அதிலிருந்தும் நீக்கப்பட்டு விட்டார். அவர் அண்மையில் தமது அலுவலகத்தை தஞ்சோங் தொக்கோங் பகுதிக்கு மாற்றிக் கொண்டார். அதனால் அவர் தஞ்சோங் பூங்கா தொகுதியை குறி வைத்துள்ளாரா என்ற ஊகம் எழுந்ததது. அந்தத் தொகுதி இப்போது தே யீ சியூ வசம் உள்ளது.

சுற்றுச்சூழல் விஷயங்களுக்குப் போராடுவதால் தே பசுமை மாண்புமிகு என அழைக்கப்படுகின்றார்.
அவரை தொகுதியில் உள்ள குடியிருப்பாளர் அமைப்புக்களும் அரசு சாரா அமைப்புக்களும் நேசித்த போதிலும் சில சமயங்களில் தமது கட்சியின் நிலைக்கு பாதகமாகவும் செயல்பட்டுள்ளார். அது சில மேம்பாட்டாளர்களுக்கு எரிச்சலையும் அளித்துள்ளது.

டிஏபி தலைமைச் செயலாளரும் முதலமைச்சருமான லிம் குவான் எங்-கை கடுமையாக குறை கூறி வரும் தான், அவருடன் அவரது ஆயர் பூத்தே தொகுதியில் மோதுவதற்கு மறுத்து விட்டார்.

“என் அரசியல் எதிர்காலத்தை முடித்துக் கொள்ளும் அளவுக்கு முட்டாள் அல்ல என்று நான் நினைக்கிறேன்,” என அவர் பினாங்கில் நிருபர்கள் சந்திப்புக்குப் பின்னர் கூறினார்.

என்றாலும் தாம் ஒரு நோக்கத்தில் தெளிவாக இருக்கிறார். திறமை, பொறுப்பு, வெளிப்படையான போக்கு ஆகியவற்றை வலியுறுத்தும் லிம் வழி நடத்தும் அரசாங்கத்தின் தவறுகளை தொடர்ந்து பொது மக்களுக்கு அம்பலப்படுத்துவதற்கு ஒரு மேடையப் பெற அவர் உறுதி பூண்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது அவற்றின் விவரங்களை அறிவிப்பதாக அவர் உறுதி அளித்தார். மக்கள் தனக்குச் செவி சாய்த்து வாக்களிக்கும் போது தெளிவான முடிவைச் செய்ய முடியும் என தான் நம்புகிறார்.

 

TAGS: