கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் தலைவர் கர்ணல் கடாபி, பள்ளிச் சிறுமிகளை கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அவர்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வந்ததாக தகவல் ஒன்று கூறுகிறது.
பிரான்ஸ் ஊடகவியலாளரான அன்னிக் கொகனால் ௭ழுதப்பட்டு கடந்த வாரம் வெளியான ‘லெஸ் புரொயிஸ் டான்ஸ் வி ஹரெம் டி கடாபி’ ௭ன்ற நூலிலேயே இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான செய்திகள் பன்னாட்டு ஊடகங்களில் திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
கர்ணல் கடாபியின் அந்தப்புரத்தில் பாலியல் அடிமைகளாக செயல்பட நிர்ப்பந்திக்கப்பட்ட சிறுமிகளிடமிருந்து பெறப்பட்ட திடுக்கிடவைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அன்னிக் மேற்படி புத்தகத்தை எழுதியுள்ளார். அவரால் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் சொராயா ௭ன்ற 15 வயது சிறுமியும் ஒருவராவார்.
தனது பள்ளிக்கு வந்த கர்ணல் கடாபிக்கு பாடசாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் மலர்கொத்துகளை சொராயா வரவேற்றுள்ளார்.
மலர்கொத்தை கையேற்ற கடாபி, சொராயாவின் தலையில் தனது கரத்தை வைத்துள்ளார். சிறுமி தனக்கு வேண்டும் ௭ன்பதை தனது உதவியாளர்களுக்கு அறிவிப்பதற்காகவே கடாபி இவ்வாறு சமிக்ஞை செய்ததாக கூறப்படுகின்றது.
மறுநாள் சிர்ட் நகரிலுள்ள சொராயாவின் வீட்டிற்கு சீருடை அணிந்த நிலையில் வந்த கடாபியின் பெண் உதவியாளர்கள் பிறிதொரு வரவேற்பு வைபவத்துக்கு சொராயா தேவைப்படுவதாக தெரிவித்து அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
அதன்பின், காட்டு வழியாக கடாபியின் அந்தப்புரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சொராயா ஆபாசமான ஆடை அணிவிக்கப்பட்டு கடாபியின் படுக்கை அறைக்குள் தள்ளப்பட்டுள்ளார். அங்கு கடாபி நிர்வாணக் கோலத்தில் இருப்பதைக் கண்டு சொராயா அதிர்ச்சியடைந்துள்ளார். இதன்போது கடாபி சொராயாவின் கையை பற்றி இழுத்து கட்டிலில் அமர வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தான் ஆரம்பத்தில் கடாபியை ௭திர்த்து போராடியதாகவும் இறுதியில் பலிகொடுக்கப்பட்ட ஆட்டுக் குட்டியாக கடாபியால் திரும்பத் திரும்ப பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாகவும் சொராயா கூறினார்.
சில சமயங்களில் கடாபி தனது பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்கு ஒரே சமயத்தில் பல சிறுமிகளை பயன்படுத்துவதையும் வழக்கமாக கொண்டிருந்ததாக சொராயா தெரிவித்துள்ளார்.