லண்டன்: ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்தை ஆதரிக்கும் பிரான்ஸ் நாடு, அரசு ஆவணங்களில் “தாய்- தந்தை” என்ற வார்த்தைகளை நீக்கி விட்டு, “பெற்றோர்” என்ற வார்த்தையை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
ஓரின சேர்க்கையாளர்கள், தங்கள் திருமணத்தை அங்கீகரிக்கக்கோரி பல்வேறு நாடுகளில் போராடி வருகின்றனர். இத்திருமணத்தை ஆதரிக்கும் பிரான்ஸ் அரசு, ஓரின சேர்க்கையாளர்கள் குழந்தையை வளர்க்க ஏதுவாக, அரசு ஆவணங்களில் குழந்தைகளின், தாய்- தந்தை என்ற வார்த்தையை நீக்க முடிவு செய்துள்ளது.
இதற்கு பதிலாக, “பெற்றோர்” என்ற ஒரு வார்த்தையை மட்டும் பயன்படுத்த பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்டவரைவு உருவாக்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.