சில ஆண்டுகளில் எப்படி ஒர் இந்தோனிசியர், பூமி ஆனார்?

“தேசியப் பதிவுத் துறை, குடி நுழைவுத் துறை ஆகியவற்றில் அத்தகைய மக்களுடைய குடியுரிமையை அங்கீகரித்தது யாராக இருந்தாலும் நாட்டுக்குத் துரோகம் செய்துள்ளனர்.”

 

 

 

மிஸ்மா-வுக்கான குடியுரிமை ‘குடிநுழைவு விதிகளுக்கு முரணானது

பீரங்கி: மிஸ்மாவைப் போன்று சபாவில் 700,000 பேருக்கு “சிறப்பு நிலை” அடிப்படையில் மலேசியக் குடியுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

சில காலத்துக்கு முன்பு மலேசியாகினி-யில் வாசகர் ஒருவர் எழுதிய கதை நினைவில் இருக்கிறதா? முகமட் என்பவர் இந்தியா, கேரளாவிலிருந்து இங்கு வந்தார். அவர் உள்ளூர் மாது ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். அவரது புதல்வர் மகாதீர் கால ஒட்டத்தில் இந்த நாட்டின் நான்காவது பிரதமர் ஆனார்.

அதே போன்று பிலிப்பீன்ஸ் ஸாம்போவாங்காவைச் சேர்ந்த கிராம் பின் ஜுக்ஸாட் என அழைக்கப்பட்ட ஒருவர் 1998ம் ஆண்டு செம்பனைத் தோட்டம் ஒன்றில் வேலை செய்வதற்காக சண்டக்கான் சென்றடைந்தார். “சிறப்பு நிலை” அடிப்படையில் ஒரு வேளை போலி பிறப்புச் சான்றிதழைக் கொண்டு கிராம்-க்கு மலேசியக் குடியுரிமை கொடுக்கப்பட்டது.

19 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது புதல்வர் சபா மலேசியப் பல்கலைக்கழகத்தில் மாணவராக சேர்ந்தார். பட்டதாரியானதும் அவர் அரசியலில் நுழைந்தார். இறுதியில் சபா முதலமைச்சராகிறார்.

மை தோர்: விதிகள் என்பது மனிதன் உருவாக்கியவை. அவற்றை ஒருவர் தமக்கு தோதாக  எப்படியும் வளைக்கலாம். உடைக்கலாம். மலேசியாவில் எத்தகைய எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் பெரிய அளவில் குடியுரிமைப் பதிவு நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. முஸ்லிமாக இருந்தால் போதும்.

என்றாவது ஒரு நாள் மலேசியா அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்படும். அவர்கள் மலேசியாவைக் குடியரசாகப் பிரகடனம் செய்வார்கள். மற்ற நாடுகளில் நடந்ததைப் போல. அப்போது அரச குடும்பத்தினர் மகுடங்களை இழப்பார்கள். நமது மாமன்னரை இறைவன் காப்பாற்றட்டும்!

அடையாளம் இல்லாதவன்:”சிறப்பு நிலை” என்னும் பிரிவின் கீழ் மிஸ்மா தகுதி பெற்றார். இங்கு என்ன சிறப்பு நிலை? மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்கு அவருக்கு என்ன தனிச் சிறப்பு இருக்கிறது? தயவு செய்து உள்துறை அமைச்சர் அந்த விஷயத்தில் விளக்கம் தருவாரா?

திசியா: ஒர் இந்தோனிசியத் தொழிலாளருக்கு அவர் இங்கு வந்து சேர்ந்த ஒராண்டில் பிஆர் என்ற நிரந்தர வசிப்பிடத் தகுதி கொடுக்கப்படுகிறது. பிறகு சில ஆண்டுகளில் குடியுரிமையும் வழங்கப்படுகிறது.

இப்போது அவர் ஒரு பூமிபுத்ரா. பூமிபுத்ராக்களுக்கு கிடைக்கும் எல்லா சிறப்புச் சலுகைகளையும் அவர் அனுபவிக்கிறார். அதே வேளையில் இந்த நாட்டில் காலம் காலமாக வாழ்ந்து, இந்த நாட்டுக்கு  பெரிதும் உழைத்துள்ள சீனர்களும் இந்தியர்களும் இரண்டாம் தர அல்லது ஏன் மூன்றாம் தர பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர்.

அன்புள்ள மலேசியர்களே, இது நியாயமா?

அசோகா பிஜே:  1931ம் ஆண்டு நெகிரி செம்பிலான் லாபுவில் பிறந்த என் தாயார், இலங்கைக்கு சென்றார். பின்னர் 1940களில் இங்கு திரும்பி உள்ளூர் மலாயாவாசியைத் திருமணம் செய்து கொண்டார்.

அவர் இன்னும் சிவப்பு அடையாளக் கார்டையே வைத்திருக்கிறார். இன்று வரை அவர் நாடற்றவர்.

கேகன்: குடி நுழைவுத்துறை தலைமை இயக்குநர் விதிகளைப் பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். ஆனால் அவற்றைப் பின்பற்றாத வேளையில் அதனால் என்ன நன்மை?

மலேசிய மலேசியன்: தேசியப் பதிவுத்துறை, குடி நுழைவுத்துறை ஆகியவற்றில் அத்தகைய மக்களுடைய குடியுரிமையை அங்கீகரித்தது யாராக இருந்தாலும் நாட்டுக்கும் மாமன்னருக்கும் துரோகம் செய்துள்ளனர்.

இந்த நாட்டுக்கு எதிராக துரோகம் செய்துள்ள அவர்கள் எப்படி நிம்மதியாகத் தூங்க முடியும்?

மலேசியர்கள் ஒன்றுபட வேண்டும். நமது உள்ளூர் சமூகங்களில் பரவி விட்ட அந்த அந்நியர்களைக் களையெடுக்க வேண்டும். அவர்களைக் கண்டு பிடியுங்கள். புகார் செய்யுங்கள். நமது நாட்டின் நன்மைக்காக அம்னோ/பிஎன் ஆதிக்கம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

ஜெடி-யார்: ஜோகூர் பாஸ் இளைஞர் தலைவர் சுஹாய்சான் காயாட்டுக்கு நன்றி. அவர் நாட்டுக்கு பெருமையைத் தேடித் தந்துள்ளார். அரசாங்கம் குறிப்பாக உள்துறை அமைச்சு செய்யும் தேசத் துரோக நடவடிக்கைகளை அம்பலமாக்கியதற்காக மீண்டும் நன்றி.

அந்தத் தகுதி இல்லாத குடிமக்கள் ( ஒரு மில்லியனிலிருந்து 2.5 மில்லியன் வரை) நீதிமன்றங்கள் முடிவு செய்யும் வரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கி வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் நியாயமான தேர்தலை நடத்த முடியும்.

டூட்: அம்னோ/பிஎன் மற்றும் அதன் அடிவருடிகளுக்கும் விதிமுறைகள் பொருந்தாது. மிஸ்மா விஷயத்தைப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. சபாவையும் எம் திட்டத்தையும் நினைத்துப் பாருங்கள். போதும்.

TAGS: