இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைக்கப்பட்டிருந்த வவுனியா மனிக்பாம் முகாம் அண்மையில் இலங்கை அரசால் மூடப்பட்டது. இதனை வரவேற்று ஐ.நா மன்றம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது. எனினும், தற்போது அந்த அறிக்கை மீட்க்கொள்ளப்படுவதாக ஐ.நா மன்றத்தின் துணைச் செயலாளர் அஜெய் நாயகம் சிப்பர் தெரிவித்துள்ளார்.
வவுனியா மனிக்பாம் முகாம் மூடப்பட்டு முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களை வைத்து சீனியாமோட்டை மற்றும் சூரியபுரம் காட்டுப் பகுதியில் புதிய முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனை ஐ.நா எதிர்க்காதது ஏன் என யாழ்ப்பாண சிவில் பாதுகாப்புக் குழுவினர் கேள்வி எழுப்பினர். அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள்கூட செய்துகொடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரியப்படுத்தினர். இதனைக் கேட்டறிந்த ஐ.நா. துணைச் செயலாளர் தாம் வெளியிட்ட அறிக்கையை மீட்டுக்கொள்வதுடன் இதுகுறித்து அறிக்கை ஒன்றினை ஐ.நா தலைமையகத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.