இலங்கையின் கோரிக்கை இந்தியாவால் நிராகரிப்பு

தமிழ் நாட்டில் உள்ள கூடங்குளத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள அணு மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த பாதுகாப்புக் கண்காணிப்புக் குழுக்களில் இலங்கையரும் அங்கம் வகிக்க வேண்டுமென்ற இலங்கையின் நீண்ட காலக் கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளதாக இலங்கை அணுசக்தி அதிகார மன்றத் தலைவர் கலாநிதி ரஞ்சித் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மேற்படி அணு உலைச் செயற்பாடுகளால் ஏற்படவுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் பற்றிய இலங்கையின் கவலைகள் குறித்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் புதுடில்லியில் இரு நாட்டு அதிகாரிகளும் நடத்திய இரு நாள் பேச்சுவார்த்தையின் போதே இலங்கையின் கோரிக்கை இந்திய அதிகாரிகளால் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டது.

TAGS: