இலங்கை விவகாரம் குறித்து சர்வதேச சமூகம் கூடுதல் கவனம் செலுத்தவில்லை: சூடான் குற்றச்சாட்டு

இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச சமூகம் கூடுதல் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக சூடான் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற ஆயுத முரண்பாடு வருந்தத்தக்கது எனவும் அதற்காக அனுதாபப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான சூடான் பிரதிநிதி அலி ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.

சூடானில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சூடான் ஜனாதிபதி ஒமர் பஸிர் மீது குற்றம் சுமத்தியிருந்தது. ஆனால், இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச சமூகம் மெத்தனப் போக்கைப் பின்பற்றி வருகின்றது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கால மீளாய்வு அமர்வுகளில் கலந்து கொண்ட போதே அலி ஒஸ்மான் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பக்கச் சார்புடன் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ள அவர் நவநீதம்பிள்ளை ஏன் இலங்கைக்கு பயணம் செய்து விசாரணை செய்யவில்லை என பெலாரஸ் பிரதிநிதி கேள்வி எழுப்பினார்.

TAGS: