தலைமை நீதிபதி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தேவையில்லை: அமெரிக்கா

இலங்கை தலைமை நீதிபதி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டாம் என இலங்கைக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் ஷிராணி பண்டாரநாயகே (வயது 54). இவர் இலங்கையின் முதல் பெண் நீதிபதியாவார். இவர் மீது தனது அதிகார வரம்பை மீறியது, முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது போன்ற குற்றச்சசாட்டுகளைக் கூறி நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு அமெரிக்கா தனது கவலையை தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நூலாந்து கூறுகையில், தலைமை நீதிபதி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அமெரிக்கா கவலைப்படுகிறது. இது போன்ற தீர்மானங்களை இலங்கை அலசு தவிர்க்க வேண்டும். நீதித்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என கூறினார்.

இதேவேளை, தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயகவை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கையில் இறங்கியுள்ள இலங்கை அரசாங்கம் நாட்டின் நீதித்துறைக் கட்டமைப்பை பலவீனப்படுத்த முயல்கிறது என இலங்கை முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.

TAGS: