ஊழல் பிரச்னை காரணமாக சீனாவும், அதை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியும் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்குவதாக சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ எச்சரித்துள்ளார். சீனாவில் தற்போது தலைமை மாற்றம் நடைபெறவுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
பீஜிங்கில் நடக்கும் மக்கள் காங்கிரஸ் அவையை துவக்கி வைத்துப் பேசிய ஹூ ஜிண்டாவோ, ஊழல் காரணமாக மக்களுக்கு கோபம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அரச அதிகாரிகளும் அவர்களின் குடும்பத்தினரும் உயரிய தார்மீக நெறிகளை கைகொள்ள வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.
சீனாவில் அரசியல் அதிகாரத்தை அடுத்த தலைமுறையினருக்கு கையளிக்கும் இந்த நிகழ்வானது, பிரபல முன்னாள் அமைச்சர் போ ஜிலாய் மீதான கொலை மற்றும் ஊழல் புகார்களால் ஏற்கனவே பின் தள்ளப்பட்டது. சட்ட திட்டத்தையும், கட்சியின் கட்டுப்பாட்டையும் மீறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஹூ ஜிண்டாவோ வலியுறுத்தியுள்ளார்.
-BBC