உங்கள் கருத்து: “நீங்கள் இந்தியர்களிடமிருந்து எதையாவது பிடுங்கிக் கொண்டு பின்னர் அதனை எடுத்துக் கொள்ளப் போவதில்லை என வாக்குறுதி அளிப்பது அடுத்து அதற்காக இந்தியர்கள் நன்றியுடன் இருக்க வேண்டும் !”
பிரதமர்: சிலாங்கூரை பிஎன் வென்றால் பத்துமலை “கொண்டோ” ரத்துச் செய்யப்படும்
சின்ன அரக்கன்: சிலாங்கூர் பிஎன் ஆட்சியில் இருந்த 2007ம் ஆண்டு அந்தத் திட்டத்துக்கு செலாயாங் பிஎன் நகராட்சி மன்ற உறுப்பினர்கள் அங்கீகாரம் அளித்தார்கள்.
அந்தத் திட்டம் இப்போதும் பெரிய சர்ச்சையாக உருவெடுத்து விட்டது. பிஎன் தலைவர்கள் எந்த வெட்கமும் இல்லாமால் அந்தத் திட்டத்தை அமலாக்க பக்காத்தான் ராக்யாட் சிலாங்கூர் அரசாங்கம் அனுமதித்து விட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
பிஎன் தலைவர்கள் அந்தப் பிரச்னையைத் தங்களுக்குச் சாதகமாகப் ‘பெரிதுபடுத்துகின்றனர்’. சிலாங்கூரில் பிஎன் மீண்டும் ஆட்சிக்குத் திரும்பினால் அந்தத் திட்டம் ரத்துச் செய்யப்படும் என்றும் சொல்கின்றனர். இது போன்ற கறை படிந்த அரசியலைத் தான் பிஎன் இவ்வளவு காலமாகப் பின்பற்றி வருகின்றது.
பிஎன் உண்மையில் அந்தத் திட்டத்தை நிறுத்த எண்ணினால் 2007ம் ஆண்டு அதனை அங்கீகரித்ததற்காக அது முதலில் மன்னிப்புக் கேட்க வேண்டும். இரண்டாவதாக அது அந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்துவதற்கு தனது அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்தையும் செய்து அந்த விஷயத்திற்கு மென்மேலும் அரசியல் சாயம் பூசாமல் அந்தத் திட்டத்தின் மேம்பாட்டாளர்களுடன் நேருக்கு நேர் மோத வேண்டும்.
வாக்குகளை ‘கவருவதற்கு’ எதையாவது சொல்லி விட்டு அந்த வாக்குறுதியைப் பின்னர் நிறைவேற்றுவதாகச் சொல்வது வெட்கக்கேடானது.
ஸ்விபெண்டர்: பத்துமலையில் 29 மாடி ஆடம்பர அடுக்குமாடி வீட்டுத் திட்டத்தை அங்கீகரித்தது பக்காத்தான் ராக்யாட்டே என்னும் தோற்றத்தைத் தருவதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் முயற்சி செய்வதாகத் தோன்றுகிறது.
அந்தத் திட்டத்தை அங்கீகரித்தது பிஎன் என்பது ஏதுமறியாத இந்தியர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். இப்போது அந்தப் பிரச்னையில் நஜிப் ஆதாயம் தேட முயலுகிறார். அதற்கு மஇகா-வும் பத்துமலை கோவில் குழு ஒத்துழைக்கின்றன.
அந்தப் பிரச்னை மீது முக்கிய நாளேடுகள் மௌனம் சாதிக்கின்றன. சிலாங்கூரை பிஎன் கைப்பற்றுமானால் அதனைக் கைவிடுவதாக நஜிப் வாக்குறுதி அளித்திருப்பதைத் தொடர்ந்து கதையைத் திசை திருப்பும் வேலை நாளை நாளேடுகளில் தொடங்கும்.
சிசிசான்: இந்துக்களுக்கு நஜிப் வாக்குறுதி அளித்துள்ளது நல்ல நடவடிக்கையே. ஆனால் மூளையில்லாத அந்த முடிவை எடுத்த செலாயாங் நகராட்சி மன்ற உறுப்பினர்களையும் அங்கீகாரம் கொடுக்கப்படுவதற்கு ஆட்சேபம் தெரிவிக்காத அரசாங்க அதிகாரிகளையும் தண்டிப்பதற்கு பிரதமர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தியிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். அது மேலும் நம்பிக்கையைக் கொடுக்கும்.
இனவாத எதிர்ப்பாளன்: அம்னோவின் வழக்கமான வியூகம் இது தான், நீங்கள் இந்தியர்களிடமிருந்து எதையாவது பிடுங்கிக் கொண்டு பின்னர் அதனை எடுத்துக் கொள்ளப் போவதில்லை என வாக்குறுதி அளிப்பது அடுத்து அதற்காக இந்தியர்கள் நன்றியுடன் இருக்க வேண்டும் !
மாற்றம்: சிலாங்கூரில் பிஎன் மீண்டும் வெற்றி பெறாவிட்டாலும் அந்த பத்துமலை ‘கொண்டோ’ திட்டம் ரத்துச் செய்யப்படுவதற்கு ‘நம்பிக்கை’ பிரதமர் தொடர்ந்து ஆதரவு அளிப்பாரா ?
அல்லது பக்காத்தான் கூட்டணியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதில் பிஎன் வெற்றி பெறுவதைப் பொறுத்தே அந்த ஆதரவு இருக்குமா ?
இந்தியர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்ய அவர் தமது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.
தலை வேட்டைக்காரன்: சிலாங்கூர் அரசாங்கம் அந்தத் திட்டத்தை முழுமையாக ரத்துச் செய்வதே சிறந்த வழியாகும். மேம்பாட்டாளர் தமது விருப்பம் போல என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். அவ்வாறு செய்தால் சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிமுக்கு நிறைய ஆதரவு கிடைக்கும்.
அந்தத் திட்டத்தை ரத்துச் செய்யப் போவதாக நஜிப் சொல்லி விட்டதால் பிஎன் சிலாங்கூரை மீண்டும் கைப்பற்றினால் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
அவர்கள் உருவாக்கிய குப்பையை அவர்களே அகற்றட்டும்.
ஏபியூ உறுப்பினர்: பிரச்னைகளை உருவாக்கி விட்டு அதனை தீர்க்க முயலுவதாக பாசாங்கு செய்வது பிஎன்-னுக்கு கைவந்த கலை. ஜோடிக்கப்பட்ட அந்தப் பிர்சனை தீர்க்கப்படும் என மஇகா-வை வேண்டுமானால் ஏமாற்றலாம். ஆனால் மற்ற இந்தியர்களை அல்ல. விழித்துக் கொண்டு இது போன்ற அரசாங்கத்தை நிராகரியுங்கள்.
வீரா: பிஎன் பிரச்னையை உருவாக்கியது. அந்தத் திட்டத்தைக் கைவிட பிஎன் -னுக்கு மீண்டும் அதிகாரத்தைக் கொடுக்குமாறு நஜிப் இப்போது சொல்கிறார்.
இது நீங்கள் ஊழலை இந்த நாட்டில் தடுக்க விரும்பினால் திருடர்களிடம் மீண்டும் அதிகாரத்தைக் கொடுங்கள் எனச் சொல்வதைப் போல இருக்கிறது. எல்லா மலேசியர்களும் கோமாளிகள் என அவர் நினைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.