மகிந்த ராஜபக்சே மீது மட்டக்களப்பில் தாக்குதல்; பதற்றத்தில் இராணுவம்!

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் நாவற்குடா பகுதியில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவின் உருவப்படம்  தாங்கிய பதாகைகள் மீது அடையாளம் தெரியாத சிலர் கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

ராஜபக்சேவின் பிறந்த நாளை முன்னிட்டு மட்டக்களப்பு நகருக்கு அண்மையில் உள்ள நாவற்குடா- கல்லடி பகுதிகளின் பிரதான சாலையில் வைக்கப்பட்டிருந்த ராஜபக்சேவின் விளம்பர பதாகைகளே நேற்று அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் ராஜபக்சேவின் பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த தாக்குதல் சம்பம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

ராஜபக்சே உருவப்படம் பொறிக்கப்பட்ட பாதகைகள் வைக்கப்பட்டிருந்த பகுதிகளில் காவல்துறையினரின் அதிக நடமாட்டம் இருந்தபோதிலும் துணிச்சலாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதானது மட்டக்களப்பு தமிழ் மக்கள் ராஜபக்சே மீது கடும் கோபத்தில் உள்ளனர் என்பதை தெளிவாக காட்டுகிறது.

வருகின்ற 27-ஆம் தேதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதானது சிங்கள இராணுவத்தினரை பதற்றத்தில் உறையவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.

TAGS: