புலிகளின் வெளிநாட்டு சொத்துக்கள் பற்றிய தகவல்களை கே.பி வெளியிட்டுள்ளார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்து விபரங்கள் பற்றிய தகவல்களை கேபி என்ற குமரன் பத்மநாதன் வெளியிட்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் சொத்து விபரங்களை அறிய இலங்கை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் (TID), புலிகளின் அனைத்துல முன்னாள் பொறுப்பாளர் கே.பி-யிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது இந்த விடயங்கள் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடா, மலேசியா, சுவிட்சர்லாந்து,  பிரிட்டன், நோர்வே, சுவீடன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளில் காணப்படும் சொத்துக்கள் பற்றிய விபரங்களையே TID பிரிவினரிடம் குமரன் பத்மநாதன் வழங்கியுள்ளதாகவும் அதிகளவான சொத்துக்கள் கனடாவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பேரில் புலம் பெயர் தமிழர்களிடம் சேகரிக்கபட்ட பெரும் தொகையான பணங்களை 2009-ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலிகளின் அனைத்துலக பொறுப்பாளர்கள் பலர் தங்கள் கைவசப்படுத்தியிருப்பதாகவும் அந்த பெரும் தொகை பணத்திற்காக பலர் பலிவாங்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையின்போது கே.பி கூறியுள்ளதாக திவயின செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பல்பொருள் அங்காடிகள், வாகன விற்பனை நிலையங்கள், குத்தகை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் புலிகள் பணத்தை முதலீடு செய்துள்ளதாகக் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணையின் போது தெரிய வந்துள்ள புலிகளின் சொத்து விபரங்களை முடக்குவதற்கு  இலங்கை அரசாங்கம் அனைத்துல காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளதாக தெரியவருகிறது.

புலிகளின் முன்னாள் அனைத்துலகப் பொறுப்பாளரான கே.பி என்ற பத்மதாதன், 2009-ஆம் ஆண்: கோலாலம்பூரில் வைத்து இரகசியமாக கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: