மாவீரரே பிறந்து வாரும் தாய் மண்ணிலே…

வாழ்வே அர்த்தமற்றுப் போய் தனிமை விரக்தியில் தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கையில், “நாம் தனியன்கள் இல்லை – ஒரு தேசிய இனமாகக் கூடி நிற்கிறோம். எனவே எமது மரணங்களை விலையாய் கொடுத்து; எத்தனை பேர் செத்தேனும் விடுதலையை அடைந்தே தீருவோம்” என்ற பேருறுதியுடன்
வாழ்வுக்கும் மரணத்துக்கும் அர்த்தம் கொடுப்பவர்கள் மாவீரர்கள். அவர்கள் தனியன்கள் அல்ல. வாழ்விலும் சாவிலும் வாழையடி வாழையாய் முளைப்பவர்கள்.

விதைக்கப்பட்ட மண்ணில் இருந்து புதிய விருட்சங்கள் பன்மடங்காய் தோன்றுவர் என்பதனால் வித்துக்களும் ஆயினர். ஆனால் அவர்கள் வித்தாக வீழ்ந்தது எம் மண்ணில் மட்டும் தானா?

எங்கள் மனங்களில் இல்லையா?

மண்ணை பிளந்து உடன் எழ முடியாதபடி தாய்நிலம் தற்சமயம் இறுகிக் கிடக்கிறது. அந்த இறுக்கம் தளர்ந்து இளகும் வரை காத்திருப்போமானால் இழப்பதற்கு அப்போது ஒன்றும் இருக்காது.

கேள்வி இதுதான்:

அந்த வித்துக்கள் மண்ணில் மட்டும் முளைக்க வேண்டுமா?

எங்கள் மனங்களில் விதைக்கப்பட்டவை முளைக்கக் கூடாதா?

எங்கள் மண்தானே ஆக்கிரமிப்பாளனால் இறுகிக் கிடக்கிறது; எங்கள் மனங்கள் விளைநிலமாக மாறுவதை எவன் தடுக்க முடியும்?

சர்வ வல்லமையுடன் உலக வல்லாதிக்க சக்திகளின் துணையோடு இரவு பகலாக திட்டமிட்டு எம் இனத்தை அழிக்கும் எதிரிக்கு முன்னாள் புலம்பெயர் தமிழரின் இந்தப் பார்ட் டைம் போராட்டம் வேலைக்கு ஆகும் என்று தோணவில்லை.

“மண்ணில் விருட்சங்கள் தோன்றும் – காலம் வரும்” என்பதெல்லாம் escapism ஆகிவிடும்.

புலம்பெயர் தமிழர் ஒன்றிணைந்து அர்ப்பணமும் தியாகமும் நேர்மையும் கொண்ட இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு அடிப்படை வாழ்வியல் ஆதாரங்களை ஏற்படுத்திக் கொடுத்து முழுநேர அரசியல் பணி புரிய வழிசெய்ய வேண்டியது தான் இப்போதைய முதன்மை வழி.

இல்லையெனில்:

அழிக்கிறவன் பெரிய பலத்தோடு இரவு பகலாய் வேலை செய்ய- அழிகிற நாம் முழுமூச்சாக போராட களம் இறங்காத வரை எதிரியை எதிர்கொள்ள முடியாதுபோகும். நீங்களே சிந்தியுங்கள்…

-தினேஷ், லண்டன்

———————————————————————————————————————————————————————

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் இளையோரால் உருவாக்கப்பட்ட புதிய மாவீரர் பாடல்!

[Sung By Venthan Sri / Lyrics : Nitha  / Music : Santhors]

TAGS: