தனிப்பட்ட அடையாள ஆவணங்கள் இல்லாததால் ஏற்பட்டுள்ள நாடற்ற நிலையை எடுத்துக் காட்டும் பொருட்டு தேசியப் பதிவுத் துறைக்கு ஊர்வலமாகச் செல்வதற்காக புத்ராஜெயாவில் 300க்கும் மேற்பட்டவர்கள் கூடியுள்ளனர்.
காலை மணி தொடக்கம் அங்கு சென்றடையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அருகில் உள்ள நீதித் துறை வளாகத்துக்கும் தேசியப் பதிவுத் துறைக்கும் ஊர்வலமாகச் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலோர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரது உருவப்படங்களைக் கொண்ட போலி சிவப்பு நிற அடையாளக் கார்டுகளை ஏந்தியுள்ளனர்.
குடியுரிமையைப் பெறுவதற்கான தங்கள் முயற்சியில் அரசாங்கம் தங்களைத் தோல்வி அடையச் செய்து விட்டது என்பதைக் காட்டுவதே அதன் நோக்கமாகும்.
(இன்னும் தொடரும்)