டிஏபி கட்சித் தேர்தலில் மத்திய நிர்வாகக் குழுவுக்கு மலாய்க்காரர்கள் தேர்வு செய்யப்படாதது மலேசிய உணர்வுக்கு முரணானதுஎன கெரக்கான் தலைவர் கோ சூ கூன் வருணித்துள்ளார்.
நேற்றைய தேர்தல் டிஏபி நிலையைக் காட்டி விட்டதாக பிரதமர் துறை அமைச்சருமான அவர் சொன்னார்.
“அது ஆளும் கூட்டணி பின்பற்றுகின்ற, அனைத்து மக்களுடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்ள வகை செய்யும் ஒரே மலேசியா கோட்பாட்டுக்கு முரணானது.”
நேற்றைய டிஏபி தேர்தல் ஆரோக்கியமற்ற சூழ்நிலை என்றும் டிஏபி-யில் ஒர் இனம் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதைக் காட்டுகின்றது என்றும் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி வருணித்தார்.
“எல்லா இனங்களும் பங்கு கொள்வதை உறுதி செய்வதற்கு முறையாக ஏதும் திட்டமிடப்படவில்லை என்பதையும் அது உணர்த்துகின்றது. அது நல்லதல்ல. ஏனெனில் குறிப்பிட்ட ஒர் இனம் ஆதிக்கம் செலுத்த அது வழி வகுத்து விடும். அதனால் ஊகங்களும் அதிகரித்து விடும்,” என்றும் அவர் சொன்னார்.
முன்பு அகமட் டோன் என்பவர் தேர்வு செய்யப்பட்டதைக் கருத்தில் கொள்ளும் போது இந்த முறை டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்கு மலாய்க்காரர்கள் யாரும் தேர்வு செய்யப்படாதது குறித்து அவர்கள் இருவரும் கருத்துரைத்தார்கள்.
என்றாலும் புதிய டிஏபி மத்திய நிர்வாகக் குழு இன்று ஜைரில் கிர் ஜொஹாரியையும் அரிபின் ஒமாரையும் குழுவில் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொண்டது.