ஆயுதம் ஏந்திய போலிஸ் பாதுகாப்புடன் கோவிலுக்கு வந்த இலங்கை அகதி

Tamil Nadu Police Commandoபூந்தமல்லி இலங்கை அகதிகள் முகாமிலிருந்து அகதி ஒருவர் தமிழக, புதுவை காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் திருநள்ளாறு கோவிலில் சனிக்கிழமை தரிசனம் செய்தார்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ சனீஸ்வரபகவானை தரிசிக்க வருவர். நிகழ்வாரம் சனிக்கிழமை காலை 12.45 மணிக்கு ஆயுதம் ஏந்திய பலத்த காவல்துறை பாதுகாப்புடன் பூந்தமல்லி இலங்கை அகதிகள் முகாமில் இருந்து பரமேஸ்வரன் என்பவர் திருநள்ளாறு கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார்.

கோவிலில் மூலவர் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் மற்றும் பிற சன்னிதிகளில் தரிசனம் செய்துவிட்டு, ஸ்ரீ சனீஸ்வரபகவானை அவர் தரிசனம் செய்தார். தமிழகப் காவல்துறையினர் ஆயுதம் ஏந்தி அவருக்கு பாதுகாப்பு அளித்த நிலையில், காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தகு புதுச்சேரி காவல்துறையினரும் அவருக்கு கூடுதல் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படும்போது, பூந்தமல்லி இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர் தம்பிதுரை மகன் பரமேஸ்வரன். இவர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு, திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சனீஸ்வரபகவானை தரிசிக்க அனுமதி வேண்டியதாகவும், அவரது அனுமதியின்பேரில் தமிழக காவல்துறையில் ஒரு டி.எஸ்.பி. தலைமையில் ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 4 காவலர்கள் கொண்டோர் ஆயுதமேந்திய பாதுகாப்புடன் பரமேஸ்வரனை காரைக்கால் அழைத்து வந்தனர்.

இவர்களுக்கு புதுச்சேரி காவல்துறையின் சார்பில் காவல்துறை கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. பகல் 1.35 மணிக்கு பரமேஸ்வரன் பாதுகாப்புடன் கோவிலில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார் என தெரிவித்தனர்.

பரமேஸ்வரன் 2009-ம் ஆண்டு சென்னை வந்ததாகவும், சில வழக்குகளின் கீழ் தமிழக கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் அவரை வைத்ததாகவும், பிறகு ஜாமீனில் வந்த அவர் முகாமில் தங்கியுள்ளார் என கூறப்படுகிறது.

TAGS: