ஆஸ்ரேலியா, மனுஸ் தீவில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கிடையே கிறிஸ்மஸ் தினத்தன்று ஏற்பட்ட கைகலப்பில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஆஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனுஸ் தீவு அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் ஈரான் அகதிகளுக்கும் இடையில் இம்மோதல் இடம்பெற்றுள்ளதாக ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவன் உறுதி செய்துள்ளார்.
ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொள்ள ஈரான் அகதிகள் விடுத்த அழைப்பை தமிழ் அகதிகள் மறுத்ததனாலேயே இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அகதி முகாமில் சேவையில் இருந்த G4S என்ற அரசு சார நிறுவன ஊழியர் ஒருவரும் மோதலின்போது காயமடைந்துள்ளார். இம்மோதல் சம்பம் குறித்து மனுஸ் தீவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தாக்குதல் சம்பம் இடம்பெற்ற அகதி முகாமில் 30 சிறுவர்கள், பெண்கள் உட்பட இலங்கை, ஈரான், ஆப்கான், ஈராக், பாகிஸ்தான் அகதிகள் 130 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.