பிகேஆர்: தீபக் நில விற்பனை பேரம் ‘அப்பட்டமான லஞ்சம்’

deepakவணிகரான தீபக் ஜெய்கிஷனுக்கும் சிலாங்கூர் அம்னோ மகளிர் தலைவி ராஜா ரோப்பியா அப்துல்லாவுக்கும் இடையிலான சர்ச்சையுடன் தொடர்புடைய ஒரு நிலத்தை தற்காப்பு அமைச்சின்  Lembaga Tabung Angkatan Tentera’s (LTAT) கொள்முதல் செய்துள்ளதை தடுத்து நிறுத்துமாறு சிலாங்கூர் அரசாங்கத்தை கேட்டுக் கொள்ளப் போவதாக பிகேஆர் இன்று அறிவித்துள்ளது.

தீபக்கின் நிறுவனமான Astacanggih Sdn Bhdன் 80 விழுக்காடு பங்குகளை 30 மில்லியன் ரிங்கிட்டுக்கும் ராஜா ரோப்பியாவின் Awan Megah (M) Sdn Bhd இன் 200 ஏக்கர் நிலத்தை 130 மில்லியன் ரிங்கிட்டுக்கும் கொள்முதல் செய்வது “காப்பாற்றுவதைக் காட்டிலும் மோசமானது” என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் வருணித்தார். ஏனெனில் அந்த நடவடிக்கை எல்லாத் தரப்புக்களுக்கும் பணத்தை கொடுத்து விட்டு வாயை மூடச் செய்வதாகும்.

“சிலாங்கூர் அம்னோ மகளிர் தலைவி (ராஜா ரோப்பியா ), தீபக், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆகியோரது நலன்கள் மட்டுமே இந்தப் பேரத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளன.”

“எங்களை பொறுத்த வரையில் அந்த 160 மில்லியன் ரிங்கிட்டை எடுத்து கொள்வது- அந்த நிறுவனத்தை காப்பாற்றுவதற்காக என்று கூட நான் சொல்ல மாட்டேன். அது அப்பட்டமான லஞ்சம். அவர்களை வாயை மூடச் செய்வதாகும்,” என ராபிஸி இன்று காலை பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

அந்த LTAT-யின் முதலீட்டு அமைப்பான Boustead Holding Sdn Bhd தனக்கு முழுமையாகச் சொந்தமான துணை நிறுவனமான Bakti Wira Development Sdn Bhd வழியாக அந்தக் கொள்முதலை செய்வதாக அறிவித்துள்ளது.

“ஏற்கனவே அது ஒர் ஏற்பாடு என நாங்கள் எண்ணியதாலும் அது தீபக்கின் தனிப்பட்ட விவகாரம் என நாங்கள் கருதியதாலும் பிகேஆர் அதில் சம்பந்தப்பட தயக்கம் காட்டியது.”

“ஆனால் இப்போது அதில் 160 மில்லியன் ரிங்கிட் பொதுப்பணம் சம்பந்தப்பட்டுள்ளதால் பிகேஆர் தலையிடுகின்றது. அந்தப் பணம் இராணுவ வீரர்களின் ஒய்வூதிய நிதியிலிருந்து எடுக்கப்படுகின்றது.”

ஏற்கனவே தீபக் தமது Astacanggih Sdn Bhdக்கும் ராஜா ரோப்பியாவின்  Awan Megah (M) Sdn Bhdக்கும் இடையிலான நில விற்பனை பேரம் முடியாமல் போனதைத் தொடர்ந்து பிரதமருக்கும் அவரது குடும்பத்துக்கும் எதிராக பல கடுமையான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினார். அந்த விவகாரத்தைத் தீர்க்க நஜிப் தலையிட வேண்டும் என்றும் தீபக் கேட்டுக் கொண்டார்.

 

TAGS: