இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் சொந்த நாட்டிற்கே திரும்ப விருப்பம்

cocos_refugeeஆஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சட்டவிரோதமான முறையில் சென்ற மேலும் 30 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் சொந்த நாட்டிற்கே திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களை நெஹ்ரூ தீவு முகாமிற்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது நெஹ்ரூ தீவு முகாமில் இருப்பதைவிட இலங்கைக்கு திரும்புவது மேலானது என தாம் எண்ணுவதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களை முன்வைக்கப் போவதில்லை என குறித்த இலங்கையர்கள் குறிப்பிட்டதாக ஆஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது.

சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களின் வார்த்தைகளை நம்புவதனால் பயனில்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்கள் நெஹ்ரூ தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

மனுஸ் மற்றும் நெஹ்ரூ தீவுகளுக்கு அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பி வைப்பதன் மூலம், பலர் நாடு திரும்ப விருப்பம் தெரிவிக்கக் கூடுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 13ஆம் தேதியிலிருந்து 883 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக ஆஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

TAGS: