தீபக் இந்த வாரம் எம்ஏசிசி-யைச் சந்திக்கிறார்

deepakவணிகரான தீபக் ஜெய்கிஷன் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய புத்ராஜெயா அலுவலகத்துக்கு இந்த வாரத்துக்குள் செல்லக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நேற்று அந்தச் சந்திப்பு நிகழ்வதாக இருந்தது ஆனால் எம்ஏசிசி-க்கு தம்மை வரச் சொன்ன அதிகாரிக்கு மற்ற வேலைகள் இருந்தன என தீபக் சொன்னார்.

“ஆகவே அவர் என்னை இந்த வாரத்துக்குள் வருமாறு சொன்னார். நான் அங்கு செல்வதற்கு முன்னர் எனக்கு ஊடக உதவி தேவைப்படும் என்பதால் நான் அது குறித்து ஊடகங்களுக்கு தகவல் தெரிவிப்பேன்.”

“நான் அங்கு செல்வதற்கு முன்னர் நான் எம்ஏசிசி-யிடம் என்ன சொல்லப் போகிறேன் என்பதை ஊடகங்களுக்கு தெரிவிப்பேன்,” என்றார் தீபக்.

தம்மை அழைத்த அதிகாரியின் அடையாளத்தை தெரிவிக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அதனை வெளியிட அனுமதி இல்லை எனப் பதில் அளித்தார். என்றாலும் கடந்த காலத்தில் தாம் சந்தித்த அதே நபர்தான் என்று மட்டும் சொன்னார்.

அவர் எதற்காக அழைக்கப்பட்டுள்ளார் என்ற விவரங்களை வழங்கவும் தீபக் மறுத்து விட்டார். எம்ஏசிசி அலுவலகத்துக்குள் நுழைவதற்கு முன்னர் மேல் விவரங்கள் தருவதாக மட்டும் அவர் சொன்னார்.

பாலாவா அல்லது நிலப் பேரமா ?

தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம் தனது முதலாவது சத்தியப் பிரமாணத்தை மீட்டுக் கொள்வதில் பங்காற்றியதை அண்மையில் ஒப்புக் கொண்ட தீபக் அந்த விஷயத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கும் பங்கு உள்ளதாக கூறிக் கொண்டுள்ளார்.

புதிய ஆதாரங்கள் இல்லாவிட்டால் பாலசுப்ரமணியம் மீதான விசாரணை முடிந்து விட்டதாக அப்போது எம்ஏசிசி கருதியது.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருந்த ஒரு வழக்கு கடந்த வாரம் மீட்டுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தற்காப்பு அமைச்சு நிறுவனம் ஒன்று தீபக்கிற்குச் சொந்தமான Astacanggih Sdn Bhd-டை கொள்முதல் செய்த சட்டச் சர்ச்சையிலும் தீபக் சிக்கிக் கொண்டுள்ளார்.