அனைத்துலகத்தின் தலையீடு இல்லாமல் தீர்வு காணமுடியாது : TNA

suresh-premachandranஇலங்கையில் தமிழர்களுக்கான ஓர் அரசியல் தீர்வை அனைத்துல சமூகத்தால் மட்டுமே கொண்டுவரமுடியும் என்றும் அதற்கான அழுத்தத்தை அனைத்துலக சமூகம் இலங்கை அரசுக்கு கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளும் ஆற்றல் இன்மையையும் விருப்பமின்மையையும் இலங்கை அரசாங்கம் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. எனவே அனைத்துலகத்தின் தலையீடு இன்றி தேசிய பிரச்னைக்கு தீர்வு காண்பது முடியாத காரியமாகும் என்று TNA நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிர்வதில் இலங்கை அரசாங்கம் உண்மையான அக்கறையுடன் இருக்குமாயின் அரசாங்கம் 18 ஆவது திருத்தத்தையோ அல்லது திவிநெகும என்ற வாழ்வின் எழுச்சி சட்டமூலத்தையோ கொண்டுவந்திருக்காது என்றார்.

அரசியல் தீர்வை உருவாக்குவதற்காக அமைக்கப்படவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்குபற்றுமா? எனக்கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், பிரதம நீதியரசருக்கு நடந்ததை பார்த்ததன் பின்னர் பகுத்தறிவுள்ள எவரும் இவ்வாறான செயன்முறைகளை நம்பமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

TAGS: