சிங்கள இராணுவத்திலிருந்து 71458 பேர் தப்பியோட்டம்!

sl_armyசிங்கள இராணுவப் படையிலிருந்து கடந்த ஆண்டு 71ஆயிரத்து 458 பேர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2012ம் ஆண்டின் முதல் காலாண்டில் பணிக்குத் திரும்பத் தவறிய படையினரின் எண்ணிக்கையே 71ஆயிரத்து 458 பேராகும். இவர்களில் 33ஆயிரத்து 532 பேர் இராணுவ நடைமுறைகளின் கீழ், இராணுவத்தை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்தை விட்டுத் தப்பியோடியுள்ளபடையினரைத் தேடிப்பிடித்துக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிழக்கே வெலிகந்த புனர்வாழ்வு முகாமில் தற்போது புனர்வாழ்வு பெற்றுவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரும் புனர்வாழ்வுக் காலம் முடிந்த பின்னர் பல்கலைக்கழகத்தில் அவர்களது கல்வியைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

ஆனாலும் மாணவர்கள் விடுதலையாகும் கால எல்லை குறித்து கூற முடியாது எனவும் தெரிவித்த ஹத்துருசிங்க, இது மாணவர்களின் நடவடிக்கையைப் பொறுத்தே அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: