காவல்துறை பாதுகாப்பு கோருகிறார் இலங்கை தலைமை நீதிபதி

shirani_bandaranayake.இலங்கை தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க தனது பணி நீக்கத்திக்கான கடிதத்தை பெற்ற போதும் அவர் பதவியிலிருந்து விலகுவதற்குத் தயார் இல்லை தெரிவிக்கப்படுகிறது.

அதுவேளை, ஷிராணி பண்டாரநாயக்க தற்போதும் தலைமை நீதிபதி என்ற வகையில் அவர் தனக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சட்டரீதியாக காவல்துறை ஆணையரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் மீதான குற்றச்சாட்டுத் தீர்மானம் மற்றும் பதவி நீக்கம் செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என அனைத்துலக ரீதியாக கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் பதவி விலகலை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் பீரிஸ், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே முன்னிலையில் இன்று மாலை சத்தியப் பிரமானம் செய்துகொள்ளவுள்ளார்.

இலங்கை தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்காவை பணி நீக்கம் செய்ய ராஜபக்சே அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழும்பியுள்ளது.

இதேபோன்று, மாலைதீவு முன்னாள் அதிபர், அந்நாட்டு மூத்த நீதிபதியை கைதுசெய்ய உத்தரவு வழங்கியதை அடுத்து அங்கு ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையினால் அதிபர் பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக தூக்கியெறியப்பட்டார். இவர் மகிந்த ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: