பாமகோ: ஆப்ரிக்க நாடான மாலியில், பயங்கரவாதிகளை ஒடுக்க பிரான்ஸ் நாட்டு படைகள் வான்வழி தாக்குதலை நடத்துகின்றன.
ஆப்ரிக்க நாடான மாலியில், அல் குவைதா ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள் கயோ உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றினர். இந்த பயங்கரவாதிகளை சமாளிக்க மாலி அரசு, பிரான்ஸ் நாட்டின் உதவியை நாடியது.
இதையடுத்து, கடந்த வாரம் மாலிக்கு விரைந்த பிரான்ஸ் படைகள், விமானம் மூலம் குண்டு வீசி பயங்கரவாதிகள் கைப்பற்றிய பகுதிகளை மீட்டன. இந்த தாக்குதலில், 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தற்போது மாலியில் அவசரநிலை அமலில் உள்ளது. பயங்கரவாதிகள், மீண்டும் அரசு படைகள் மீது தாக்குதலை துவங்கியுள்ளதால் அவர்கள் பதுங்கியுள்ள இடங்கள் மீது பிரான்ஸ் படைகள் பதிலடி தாக்குதலை நடத்தி வருகின்றன.