பேங்க் இஸ்லாம் தலைமைப் பொருளாதார நிபுணர், 13வது பொது தேர்தலில் மாற்றரசுக் கட்சியான பக்காத்தான் ரக்யாட் குறுகிய வெற்றிபெறும் என்று கூறியதற்காக பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார்.
பதவி இடைநீக்கக் கடிதம் நேற்று பிற்பகல் கிடைத்ததாக அந்நிபுண, அஸ்ருல் அஜ்வார் அஹமட் தாஜுடின் கூறினார்.
இன்று மலேசியாகினி அவரைத் தொடர்ப்கொண்டு பேசியபோது பதவிநீக்கத்துக்கான காரணம் தெரியவில்லை என்றார். ஆனால், அண்மையில் சிங்கப்பூரில் படைத்த ஒரு கட்டுரைக்கும் அதற்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் அவர் நம்புகிறார்.
“இது அரசியல் நோக்கம் கொண்ட ஒரு செயல். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நடந்ததை நினைத்தால் அதிர்ச்சியாக இருக்கிறது”, என்றார்.
இடைநீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாக அக்கடிதம் குறிப்பிட்டது. ஆனால், எவ்வளவு காலத்துக்கு என்பதை அது குறிப்பிடவில்லை.