தாகா : வங்கதேச விடுதலைப்போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட நபருக்கு தூக்கு தண்டனை விதித்து தாகா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
வங்கதேச விடுதலைப் போர், பாகிஸ்தானுக்கு எதிராக 1971ல், நடந்தது. இதில், வங்கதேசத்திற்கு இந்திய இராணுவத்தினர் பெருமளவில் உதவிகளை செய்தனர். இந்நிலையில், வங்கதேசத்தை சேர்ந்த, அபுல் கலாம்ஆசாத் என்பவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டார். அத்துடன், அவர் மீது ஆறு இந்துக்களை கொலை செய்தது, கற்பழிப்பு மற்றும் கடத்தல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
தாகா கோர்ட்டில் நடந்த இவ்வழக்கில் நேற்று, அபுல் கலாம் ஆசாத்திற்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.