‘கருப்பு ஜனவரி’ ஆர்ப்பாட்டத்தில் இலங்கை ஊடகவியலாளர்கள்

black_janauryகடந்த சில ஆண்டுகளாக ஜனவரி மாதத்தில்  ஊடகவியலாளர்களுக்கு எதிராக இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களை நினைவுகூரும் நோக்கில் “கருப்பு ஜனவரி” என்ற பெயரில் இலங்கை தலைநகர் கொழும்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களும், சிவில் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் 17 செய்தியாளர்களும், ஊடகத் துறையைச் சேர்ந்த ஊழியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் பட்டியலிடுகின்றன. ஆனாலும் இது தொடர்பாக யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

போர் முடிந்த பிறகு 2010 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட பிரகீத் ஏக்நலிகொட என்வானார் என்பதும் இன்னமும் தெரியவில்லை. போர் நடந்த காலத்தில் நேரடித் தாக்குதல்கள் அதிகம் இடம்பற்றதாகக் கூறும் செய்தியாளர்கள், நாட்டின் செய்தியாளர்களிடையே தற்போது பெருமளவு சுய தணிக்கை நடப்பதாகக் கூறுகின்றனர்.

பத்திரிக்கையாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலுக்கும் தமக்கு சம்மந்தம் கிடையாது என்று கூறும் இலங்கை அரசு, முன்பு நடைபெற்ற கொலைகள் தொடர்பாக விசாரணைகள் தொடர்வதாகக் கூறுகிறது.

சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரம் இல்லாததால் அவர்களை விடுதலை செய்யவேண்டியதயிற்று என இலங்கை அமைச்சர் கெஹ்லியா ரெம்புக்வல்ல தெரிவித்துள்ளார்.

TAGS: