வாக்குகளுக்குக் குடியுரிமை மோசடியில் அதிக இழப்புக்களைச் சந்திப்பது பூமிபுத்ராக்களே

illegals“அவர்கள் இப்போது பிலிப்பீன்ஸ், இந்தோனிசியா, வங்காள தேசம், பாகிஸ்தான் ஆகியவற்றைச் சேர்ந்த திடீர் பூமிபுத்ராக்களுடன் கேக்கை பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும்”

பாகிஸ்தானிய பிரஜைக்கு 20 நாட்களில் நீல நிற அடையாளக் கார்டு

தே தாரேக்: வாக்குகளுக்குக் குடியுரிமை மோசடியில் அதிக இழப்புக்களைச் சந்திக்கப் போவது பூமிபுத்ராக்களே. அவர்கள் இப்போது பிலிப்பீன்ஸ், இந்தோனிசியா, வங்காள தேசம், பாகிஸ்தான் ஆகியவற்றைச் சேர்ந்த திடீர் பூமிபுத்ராக்களுடன் கேக்கை பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும்.

பள்ளிக்கூடங்கள், உபகாரச் சம்பளங்கள், வீடமைப்பு, வர்த்தகம், மருத்துவமனைப் படுக்கைகள் போன்றவற்றுக்குப் போட்டி அதிகரிக்கும் என்பதே அதன் அர்த்தமாகும்.

அம்னோ/பிஎன் பூமி உரிமைகளை மில்லியன் கணக்கான அந்நியர்களிடம் விற்றுள்ள வேலையில் உள்ளூர் பூமிபுத்ராக்கள் அதனை தொடர்ந்து ஆதரிப்பது தான் மிகவும் குழப்பமாக இருக்கிறது.

அந்த திடீர் பூமிபுத்ராக்கள் ஏற்கனவே உள்ளூர் மக்களுடன் வேலைகளுக்கும் இதர சேவைகளுக்கும் போட்டியிடுவதை மலாய்க்காரர்கள் உணர வேண்டும். கோலாலம்பூர் சௌக்கிட் சந்தைக் கூடத்தில் பெரும்பாலான வியாபாரிகள் இந்தோனிசியர்கள் ஆவர்.

அரசாங்க மகப்பேறு மருத்துவமனைகளில் இந்தோனிசிய பூமி குழந்தைகள் ஏற்கனவே நிறைந்துள்ளன.

சபாவைச் சேர்ந்த பெரும்பாலான பிலிப்பினோ, பாகிஸ்தானிய பூமிக்கள் கிள்ளான் பள்ளத்தாக்கில் பாதுகாவலர்களாகவும் டாக்ஸி ஒட்டுநர்களாகவும் வேலை செய்கின்றனர். அவர்கள் உள்ளூர் பூமிக்களுடன் போட்டியிடுகின்றனர்.

விரைவில் அந்த திடீர் பூமிக்களின் பிள்ளைகள் உபகாரச் சம்பளங்களுக்கும் வேலைகளுக்கும் முயற்சி செய்யப் போகின்றனர்.

உண்மையில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், சபா பூமிக்களுக்கும் உள்நாட்டு  மலாய்க்காரர்களுக்கும் பெரும் துரோகத்தைச் செய்துள்ளார்.

ஸ்கார்ப்பின்: எளிதாக குடியுரிமை- நாட்டுக்கே பெரிய அவமானம். நீங்கள் டுபாய்க்குச் செல்லுங்கள். ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் (UAE) உங்கள் பிள்ளைகளில் ஒன்று பிறந்தால் கூட உங்களுக்கு குடியுரிமை கிடைக்காது.

அமெரிக்காவில் நீங்கள் பேட்டியின் போது எல்லாத் திசைகளிலிருந்தும் வரும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஆஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் அதே நிலை தான்.

ஆனால் மலேசியா எளிதாக அடையாளக் கார்டுகள் கிடைக்கும் மய்யமாக கருதப்படுகின்றது. என்றாலும்  என்னுடைய நண்பர்கள் பலர் இங்கு 20 ஆண்டுகளுக்கு மேல் இருந்து விட்டார்கள். ஆண்டுதோறும் வேலை அனுமதியை புதுப்பித்துக் கொள்ள வேண்டியுள்ளது.

சிஎச்ஒய்: பாகிஸ்தானிய, இந்திய, இந்தோனிசிய, பிலிப்பீன்ஸ் மக்களுக்கு சபாவில் மை கார்டு மிக எளிதாக கிடைத்து விடுகின்றது. ஆனால் என்னைப் போன்ற  சட்டப்பூர்வமான தீவகற்ப மலேசியாவைச் சேர்ந்தவர்கள் அங்கு தங்குவது பெரும் சிரமமாகும்.

இது எவ்வளவு வினோதமானது. தேசத் துரோகமானது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

கறுப்பு மம்பா: நமக்கு வேலையை உறுதி செய்வதற்குக் கொடுக்கப்படும் காலத்தை விட வேகமாக அவர்களுக்கு  அடையாளக் கார்டுகள் கிடைத்து விடுகின்றன. உண்மையில் அதிர்ச்சியூட்டும் மோசடி தான்.

பக்காத்தான் ராக்யாட் ஆட்சிக்கு வந்தால் அந்த அடையாளக் கார்டு திட்டத்தை அறிந்துள்ள எல்லா பிஎன் அமைச்சர்களும் சிறையில் அடைக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். எல்லா அபத்தத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

டுட்: வெறுப்பைத் தரும் அந்த அத்தியாயத்தில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், மோசடிக்காரர்கள், மக்கள் துரோகிகள், தேசத் துரோகிகள். மலேசியாவுக்கு அவர்கள்  செய்துள்ள தீங்கிற்காக அவர்கள் வாழ் நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

கெனியோ: கடந்த 50 ஆண்டுகளாக தீய நோக்கம் கொண்ட ஆட்சி, உண்மையான மலேசியக் குடிமக்களுக்கு  துரோகம் செய்துள்ளனர். தாங்கள் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக வாக்காளர் பட்டியலில் கள்ளக் குடியேறிகளை அவர்கள் சேர்த்துள்ளனர்.

அதனை முறியடிப்பததற்கு ஒவ்வொருவரும் பக்காத்தானுக்கு வாக்களிக்க அவசியம் வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல வேண்டும்.

TAGS: