இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஒத்தாசை வழங்குவதற்கு இலங்கையில் தடை!

sri_lanka_parliamantஇஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளான அல்-குவைதா மற்றும் தலிபான் அடங்கலாக தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி ஒத்தாசை வழங்குவதை தடை செய்யும் திருத்தச் சட்டமூலமொன்று இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கடப்பாடு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கத்தால் மேற்படி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, பயங்கரவாதத்துக்கு நிதி வழங்களை ஒழித்தல் (திருத்தம்) மீதான சமவாயம் என்னும் சட்டமூலம் விவாதிக்கப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை தடை செய்துள்ள பயங்கரவாத நிறுவனங்களுடன் தொடர்புறும் நிதி நிறுவனங்களை தடை செய்யும் ஐ.நா கடப்பாட்டை அங்கீகரிப்பதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும். ஐ.நா இனங்கண்டுள்ள பயங்கரவாத அமைப்புகளின் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அத்தகவல்கள் குறிப்பிட்டன.

இந்த சட்டமூலத்தின்படி, பயங்கரவாத நடவடிக்கைகள் அமைப்புகளுடன் செயல்படும் எவரும் குற்றவாளியாவர். அல் – குவைதாவின் நிதிகளை முடக்குவது தொடர்பாக ஐ.நா சட்டம் இலக்கம் 45,1968இன் கீழ் இலங்கை அரசாங்கம் சில விதிகளை அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

பயங்கரவாதத்தை ஒழிக்கும் பல வகை வழிமுறைகளையும் குறிப்பாக தலிபானுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் இச்சட்டமூலம் குறிப்பிடுகின்றது.

TAGS: