பிரிட்டன் வழக்கறிஞர்களுக்கு இலங்கை அரசு தடை

srilanka_flagஇலங்கை தலைமை நீதிபதியை நீக்கியது தொடர்பாக, விசாரிக்க திட்டமிட்ட பிரிட்டன், வழக்கறிஞர்கள் குழுவுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

இலங்கை தலைமை நீதிபதியாக இருந்தவர், ஷிரானி பண்டாரநாயகே. அந்நாட்டின் முதல் பெண், தலைமை நீதிபதியும் இவர் தான். அரசியல் குற்றச்சாட்டுகளின் பேரில், கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானத்தின் மூலம் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

“என் மீதான குற்றச்சாட்டுகள், அரசியல் உள்நோக்கம் கொண்டவை” என, ஷிரானி பண்டாரநாயகே தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, பிரிட்டனை சேர்ந்த வழக்கறிஞர்கள் குழு இலங்கை சென்று விசாரிக்க திட்டமிட்டது. ஆனால், அவர்களின் விசாக்களை இலங்கை அரசு ரத்து செய்து விட்டது. இந்த தகவலைஅனைத்துலக வழக்கறிஞர் மன்றம் தெரிவித்துள்ளது.

TAGS: