கிளானா ஜெயா எம்பி லோ குவோ பேர்ன் “நீதித் துறை ஊழலுக்கு மசியக் கூடியது” என்பதைக் காட்டுவதாக தாம் கூறிக் கொள்ளும் புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2007ம் ஆண்டு விகே லிங்கம் வீடியோ ஒளிப்பதிவுகளை வெளியிட்டதின் மூலம் குவோ பேர்ன் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வீடியோவை அவருடைய தந்தையார் முய் பா சில ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்தார். அவர்கள் இருவரும் சம்பந்தப்பட்ட சிவில் வழக்கு ஒன்றை விவாதிப்பதற்காக கணக்காயர் ஒருவரைச் சந்தித்த நிகழ்வின் போது அது பிடிக்கப்பட்டது.
இரண்டு நிமிடங்களுக்கு ஒடும் அந்த வீடியோவில் முய் பா, முதுநிலை நீதிபதி எனக் கூறப்படும் “W” என்பவருடன் கணக்காயருக்கு உள்ள உறவுகளைப் பற்றிப் பேசுகிறார்.
“W” உங்களுக்கு நன்றாகத் தெரியும். உங்களுடைய நல்ல நண்பர் ! ஆகவே உங்களுக்கு உதவுமாறு நீங்கள் “W”வைக் கேட்டுக் கொள்ளலாம்,” என முய் பா யோசனை கூறினார்.
“ஆமாம்…. ஆனால் தேவை இல்லை. J அங்கு இருக்கிறார். J என்னுடைய பழைய wheeler dealer broker,” என அந்தக் கணக்காயர் சொல்கிறார்.
“W”, ‘J’ என்ற புனை பெயர்கள் அந்த வீடியோ பதிவில் கேட்கவில்லை. காரணம் அந்தப் பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளன. அதற்குப் பதில் குவோ பேர்ன் விநியோகம் செய்த எழுத்துப் படிவத்தில் அந்த புனை பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அந்த முதுநிலை நீதிபதியுடன் தமக்கு உள்ள தமது நட்புறவு குறித்து கணக்காயர் பேசிய பின்னர் ஒரு காப்புறுதியாக (பாதுகாப்பாக) இருக்கும் பொருட்டு கணக்காயரை வேண்டுமென்றே தமது தந்தை ‘பதிவு’ செய்ததாக குவே பேர்ன் கூறினார்.