தீபக்: எனது நிறுவனத்தை வாங்குமாறு பிரதமர் Boustead-க்கு ஆணையிட்டார்

deepakகம்பள வியாபாரியான தீபக் ஜெய்கிஷன், தமக்குச் சொந்தமான Asta Canggih Sdn Bhd-டை Boustead Holdings Bhd வாங்கியதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக கூறிக் கொண்டுள்ளார்.

குளறுபடியான நிலப் பேரத்தில் சம்பந்தப்பட்ட தமது குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்காக நஜிப் அதனைச் செய்தார் என தீபக் இன்று கோலாலம்பூரில் பாஸ் தலைமையகத்தில் நிருபர்களிடம் சொன்னார்.

“அது எனக்குத் தெரியும். ஏனெனில் அந்த உத்தரவு கொடுக்கப்பட்ட போது நான் அங்கு இருந்தேன்,” எனக் குறிப்பிட்ட அவர், எங்கு எப்போது அந்தக் கூட்டம் நிகழ்ந்தது என்பதைத் தெரிவிக்கவில்லை.

அதன் காரணமாக அதே விஷயம் மீது கட்டுரை வெளியிட்ட பிகேஆர் வியூகவாதி ராபிஸி இஸ்மாயிலுக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கை மீட்டுக் கொள்ளுமாறு தீபக் தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடியை கேட்டுக் கொண்டார்.

“அவருக்கு (ராபிஸிக்கு) எதுவும் தெரியாது. நீதிமன்ற நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட வேண்டும் என்றால் அது நஜிப்பை நோக்கி மேற்கொள்ளப்பட வேண்டும். காரணம் உத்தரவுகளை பிறப்பித்தது அவர் ஆகும்,” என்றார் அவர்.deepak1

இதற்கு முன்னர் முறிந்து போன நில விற்பனைப் பேரம் ஒன்றின் தொடர்பில் Asta Canggih,  Awan Megah (M) Sdn Bhd-டன் நீதிமன்றப் போராட்டத்தில் சிக்கியிருந்தது.

Boustead Holdings, தனது Bakti Wira Developments Sdn Bhd என்ற துணை நிறுவனத்தின் மூலம் Asta  Canggih-யை வாங்கிய பின்னர் அந்த வழக்கு கைவிடப்பட்டது.

தற்காப்பு அமைச்சு ஆதரவு பெற்ற ஒய்வூதிய நிதி அமைப்பான LTAT எனப்படும் Lembaga Amanah Angkatan Tentera-வுக்கு  Boustead Holdings சொந்தமானதாகும்.

அந்த நிலப் பேரத்தை முடிப்பதற்கு உதவுவதற்காக நஜிப் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தாம் 2007ம் ஆண்டு பெரும் தொகையை கொடுக்க வேண்டியிருந்ததாக கடந்த ஆண்டு நவம்பர் 28ம் தேதி கூறிக் கொண்டார்.

அந்த நேரத்தில் நஜிப் தற்காப்பு அமைச்சராக இருந்தார். தற்காப்பு அமைச்சுக்கு சொந்தமான நிலம் அந்த பேரத்தில் சம்பந்தப்பட்டிருந்தது.