பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்துலக வாணிக, தொழிலியல் அமைச்சர் முஸ்தாப்பா முகமட், வரும் தேர்தலில் பிஎன் -னை ஆதரிக்குமாறு சீன செல்வந்தர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
கோலாலம்பூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மலேசிய கூட்டு சீன வர்த்தக, தொழிலியல் சங்கத்துடன் இணைந்து இன்று அவரது அமைச்சு ஏற்பாடு செய்த நண்பகல் விருந்தில் முஸ்தாப்பா பேசினார்.
அரசாங்கம் செய்துள்ள ‘நல்ல பணிகள்’ அடிப்படையில் ஆதரவை சங்கத்திடமிருந்து கோருவதாகவும் அவர் சொன்னார்.
“ஆகவே இந்தத் தேர்தல் நிச்சயம் கடுமையானதாக இருக்கும், என்றாலும் நாங்கள் செய்துள்ள நல்ல பணிகள் காரணமாகவும் நிச்சயம் உங்கள் ஆதரவுடன் நாங்கள் வெற்றி பெறுவோம்…”
“நான் இதனைச் சொல்கிறேன். ஏனெனில் நான் உங்கள் ஆதரவைக் கோருகிறேன். நீங்கள் என்னையும் பாரிசான் நேசனலையும் மட்டுமின்றி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் ஆதரிப்பீர்கள் என நான் நம்புகிறேன்,” என மலேசிய கூட்டு சீன வர்த்தக, தொழிலியல் சங்க உயர் தலைமைத்துவத்தைச் சார்ந்தவர்களிடம் முஸ்தாப்பா கூறினார்.