இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட 54 பேர் இலங்கையின் கிழக்கு கடலில் வைத்து அந்நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்ந ஆண்டில் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட முதல் குழுவினர் இவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு கல்குடா கடலிலிருந்து 12 மைல் தொலைவில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான 54 பேரில் 6 பெண்களும் 8 சிறுவர்களும் அடங்குவதோடு தற்போது மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தமது நாட்டுக்குள் புகலிடம் கோரி கடல் வழியாக நுழையும் இலங்கையர்கள் எல்லையில் வைத்து விசாரணைகள் எதுவுமின்றி திருப்பி அனுப்பப்படுவார்கள் என ஆஸ்திரேலியா ஏற்கனவே அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அது ஆஸ்திரேலியா திருப்பி அனுப்பி வைத்துள்ளது.
இன்னும் பலர் அனுப்பி வைக்கப்படவிருப்பதாகவும அந்நாடு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இலங்கையில் மட்டும் கடற்படையினராலும் காவல்துறையினராலும் இந்த சட்ட விரோத பயணத்தின் போதும் சுமார் 1700 பேர் வரை கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர்.