சென்னை விடுதியில் பறந்த சிங்கள கொடி தமிழ் உணர்வாளர்களால் அகற்றப்பட்டது

chennai_srilanka_flagசென்னை பாண்டி பஜாரில் அமைந்துள்ள விடுதியின் வெளியே பறந்த சிங்கள கொடியை தமிழர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் இன்று அகற்றி உள்ளனர்.

இது குறித்து தமிழர் எழுச்சி இயக்கம் பொதுச் செயலாளர் வேலுமணி கருத்துத் தெரிவிக்கையில்,

இன்று காலை நடைபெற்ற திருப்பதி தேவஸ்தானம் இழுத்து மூடும் போராட்டத்தை நடத்தியதால் எமது இயக்கத்தினர் கைது செய்யப்பட்டு மாலை 5.00 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர். அங்கிருந்து பாண்டிபசாரில் (தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயில் அருகில்) உள்ள தி ரெசிடன்சி டவர்ஸ் என்ற நட்சத்திர விடுதி வழியாக சென்றோம்.

அங்கு பறக்க விடப்பட்டிருந்த இலங்கை கொடியை பார்த்து அதிர்ச்சியுற்றோம். உடனே விடுதியில் சுமார் 40 பேர் கருப்புக் கொடியை காட்டியவாறே சென்றோம். அங்கு மேலாளரை சந்திக்க வேண்டும் என்று வினவியபோது. இங்கே யாரும் இல்லை என்று வரவேற்பில் கூறினர்.

chennai_srilanka_flag_02அதற்கு உடனே தங்கள் விடுதி பொறுப்பாளர்கள் இங்கே வர வேண்டும்இ இல்லையேல் பெரும் சிக்கலை சந்திக்க நேரும் என்று பதிலுக்கு தமிழர் எழுச்சி இயக்கம் தோழர்கள் எச்சரித்தனர்.

சிறிது நேரத்தில் விடுதி மேலாளர் உட்பட சில பொறுப்பாளர்கள் வந்தனர். அவர்களிடம்:

தமிழனத்தை அழித்த இலங்கை அரசின் கொடியை தங்கள் விடுதியின் நுழைவுவாயிலில் பறக்க விட்டுள்ளீர்கள். தமிழ்நாட்டில் விடுதி வைத்துக்கொண்டு… தமிழர்களின் உணர்வை கொச்சைப்படுத்தும் வகையில் தங்கள் செயல் உள்ளது என்றும் உடனே கழற்றிவிடுங்கள் இல்லையேல் நாங்கள் கழற்ற வேண்டிய நிலை உருவாகும் என்றும் தமிழர் எழுச்சி இயக்கத் தோழர்கள் கடுமையாக எச்சரித்தனர்.

விடுதியில் இருந்த வெளிநாட்டினர் மற்றும் பல வாடிக்கையாளர்கள் கூடி விட்டனர். செய்வதறியாத விடுதி பொறுப்பாளர்கள், தமிழர் எழுச்சி இயக்கத் தோழர்களிடம் மன்னிப்புக் கேட்டதோடு உடனே இலங்கை கொடியையும் கழற்றி விட்டனர்.

TAGS: