லிம் கிட் சியாங் : எப்போதுதான் தென் கொரியாவுக்கு இணையாவோம்?

1mpஇன்று பினாங்கில் பிரதமர் நடத்தும் சீனப் புத்தாண்டுப் பொது உபசரிப்பில் தென் கொரியாவின் ‘சூப்பர் ஸ்டார்’பாடகர் Psy கங்னாம் ஸ்டைல் பாடலைப் பாடி மகிழ்விக்கும் வேளையில், மலேசியா எப்போது தென்கொரியா அளவுக்கு முன்னேறும் என்றோ இரு நாடுகளுக்குமிடையிலான இடைவெளி  எப்போது குறையும் என்றோ நஜிப் அப்துல் ரசாக் ஓர் அறிக்கை விடுவாரா?

சை, பினாங்கு வந்து நிகழ்ச்சி நடத்துவதால் பினாங்கு உலகப் புகழ் பெறப் போகிறதாம். அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால், அதைவிட பினாங்கும் மலேசியாவும் சுய முயற்சியின் பயனாக உலகப் புகழ் பெறுவதே முக்கியமாகும்.

பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு, பல்லூடகப் பெருவழி (எம்எஸ்சி)யை “உலகுக்கு ஓர் அன்பளிப்பா”க வழங்குகிறோம் என்று நாம் அறிவித்தபோது மலேசியாவும் தென்கொரியாவும் தகவல்தொழில்நுட்பத்தில் (ஐடி) ஒரே தளத்தில்தான் இருந்தன.

இன்று, எம்எஸ்சி-யும் மலேசியா-யும் ஐடி-க்கு உகந்த இடம் என்பதெல்லாம் மங்கி மறைந்து விட்டது. அதே வேளை, தென்கொரியாவைப் பொறுத்தவரை, பிராட்பேண்டு என்று சொல்லப்படும் முழுக்க முழுக்க அகண்ட அலைவரிசையைப் பெற்றுள்ள முதலாவது நாடாக விளங்குகிறது. அத்துடன் உலகிலேயே மிக வேகமான இணையத்தள இணைப்பு வசதியைப் பெற்றுள்ள நாடாகவும் திகழ்கிறது. 2012 அதன் இணையத்தள இணைப்பு வசதியின் வேகம் 14.7 Mpbs.மலேசியாவில் 2.2 Mpbsதான்.

தரம்தாழ்ந்த நிலையில்

இணையத்தள வேகம் மலேசியா மிகவும் பின்தங்கியுள்ளது. அது தாய்லாந்தின் இணையத்தள இணைப்பு வேகத்தை விடவும் குறைவானது. 2012-இல் தாய்லாந்தில் இணையத்தளத்தின் வேகம் 2.9 Mpbsஆக இருந்தது.

1mp1நிர்வாகம் என்று பார்த்தால்கூட, Transparency International-இன் ஊழல் பட்டியல் தென் கொரியாவைவிட மலேசியா ஊழல்மிக்க நாடு என்றுதான் காண்பிக்கிறது.

Reporters Sans Frontieres (எல்லைகளற்ற நிருபர்கள்) என்னும் அமைப்பு வெளியிட்ட உலக நாடுகளின் பத்திரிகைச் சுதந்திரம் மீதான தரவரிசைப் பட்டியலில் மலேசியாவுக்கு 145வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தென் கொரியா 50வது இடத்தில் உள்ளது.

2011-இல், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், .அந்த ஆய்வில் கலந்துகொண்ட நாடுகளிலேயே மலேசியாவில்தான் கணிதம், அறிவியல் ஆகியவற்றின் தரம் மிகவும் தாழ்ந்து போயிருப்பது தெரிய வந்தது.அவ்விரு பாடங்களிலும் தென் கொரியா, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகியவை நம்மை முந்திக்கொண்டிருக்கின்றன.

டைம்ஸின் 2012-20113 உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில், உலகின் சிறந்த 200 பல்கலைக்கழகங்கள் என்ற பட்டியலில் நான்கு தென்கொரிய பல்கலைக்கழகங்களும் உலகின் சிறந்த 400 பல்கலைக்கழகங்கள் என்ற பட்டியலில் ஆறும் இடம்பிடித்திருந்தன. ஆனால், மலேசியப் பல்கலைக்கழகம் ஒன்றுகூட அதில் இல்லை.

மலேசியா 56 ஆண்டுகளுக்குமுன் சுதந்திரம் பெற்றபோது தென்கொரியா நம்மைவிட ஏழை நாடாகவும் பின்தங்கிய நாடாகவும் இருந்தது. இன்று மலேசியாவைவிட இரு மடங்கு மும்மடங்கு பண வசதிகொண்ட நாடாக விளங்குகிறது. மலேசியா தென்கொரியாவைவிட பின்தங்கிப் போனதற்குக் காரணம் என்ன என்பதை நஜிப் விளக்குவாரா?

============================================================================================

LIM KIT SIANG– டிஏபி நாடாளுமன்றத் தலைவர், ஈப்போ தீமோர் எம்பி